Tuticorin Vijay Visit: என்ன மனுஷன்யா.. நெல்லை செல்லும் விஜய்..எதற்கு தெரியுமா?

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்று நடிகர் விஜய் நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் டிசம்பர் 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் பெய்த அதிக கனமழையின் காரணமாக ஏற்பட்ட வரலாறு காணாத வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டது.
இதன் மூலம் விஜய்யின் அடுத்த கட்ட நகர்வு என்னவாக இருக்கும் என பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.
நடிகர் விஜய் தளபதி 68 படத்தின் படப்பிடிப்பிற்காக ஹைதராபாத்தில் இருந்த நிலையில், திடீரென பிரேக் விட்டு விஜயகாந்தின் மறைவுக்கு அஞ்சலி செலுத்த சென்னை வந்தார். தற்போது புத்தாண்டு முடித்து விட்டு அடுத்த கட்டமாக இலங்கையில் நடைபெற இருக்கும் படப்பிடிப்புக்கு செல்ல இருப்பதாக சொல்லப்படுகிறது.
பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகிறார்கள். அந்த வகையில் வெள்ளத்தில் பாதித்த பகுதி மக்களுக்கு, நெல்லை மாநகரில் வைத்து நடிகர் விஜய் நிவாரண உதவிகளை வழங்க உள்ளார்.
இதற்காக அவர் தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டங்களுக்கு இன்று ( டிச. 30) சென்று மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க இருக்கிறார். இந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக தூத்துக்குடி நகரில் இருந்து 40 0க்கும் மேற்பட்டோரை விஜய் மக்கள் இயக்கத்தினர் திருநெல்வேலிக்கு அழைத்து சென்று இருக்கிறார்கள்.
தூத்துக்குடியில் சுமார் 27 வேன்கள் மூலம் விஜய் மக்கள் இயக்கத்தினர் சென்று இருக்கிறார்கள்.
முன்னதாக மிக்ஜாம் புயல் காரணமாக பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும் என விஜய் தனது மக்கள் இயக்கத்துக்கு ஆணையிட்டு இருந்தார். அதனைத் தொடர்ந்து பெரும் மழை காரணமாக ஏற்பட்ட வெள்ள பாதிப்பில் பெரிதும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்று நேரடியாக உதவி செய்ய களமிறங்கி இருக்கிறார்.
நடிகர் விஜய் அரசியலில் இறங்க இருப்பதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே 10, 12 ஆம் வகுப்பில் மாவட்ட அளவில் முதல் முன்று இடங்கள் பிடித்தவர்களை அழைத்து கவுரவித்தார். அவர் அரசியலில் நுழையவே இது போன்ற யுக்திகலை கையாண்டு வருகிறார் என பேசப்பட்டது. தற்போது மேலும் கனமழை வெள்ளத்தால் பாதித்த பகுதிகளுக்கு செல்ல உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.