சர்வதேச சந்தையில் 3.5 மில்லியன் யூனிட்ஸ் விற்பனை செய்த டிவிஎஸ்… எந்த மாடல் தெரியுமா..?
தனது HLX லைன்அப் 3.5 மில்லியன் யூனிட்ஸ் விற்பனை மைல்கல்லை கடந்துள்ள நிகழ்வைக் குறிக்கும் வகையில் டிவிஎஸ் நிறுவனம் புதிய HLX 150F மாடலை அறிமுகப்படுத்தி இருக்கிறது.
TVS HLX லைன் 10 ஆண்டுகளுக்கு முன் முதன்முதலில் ஆப்பிரிக்காவில் விற்பனைக்கு கிடைத்தது. இருப்பினும், தற்போது இந்த லைன்அப் லத்தீன் அமெரிக்கா, ஆப்பிரிக்கா மற்றும் ஆசியா முழுவதும் 50 நாடுகளில் கிடைக்கிறது. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள TVS HLX 150F மாடலானது பிரகாசமான trapezoidal எல்இடி ஹெட்லைட்ஸ், ரியர் லோட் கேரியருடன் கூடிய பிலியன் ஹேண்டில் ரெயில், டியூப்லெஸ் டயர்ஸ், செமி-டிஜிட்டல் ஸ்பீடோமீட்டர் மற்றும் ஃப்ரன்ட் டிஸ்க் பிரேக் உள்ளிட்ட அம்சங்களுடன் வருகிறது. கூடுதலாக இந்த மாடல் புதிய கிராபிக்ஸ், போல்ட் பிளாக் தீம், 3 கலர் ஆப்ஷன்கள், eco சார்ஜிங் போர்ட் மற்றும் புதிய சீட் ஸ்டைல் உள்ளிட்டவற்றை பெறுகிறது.
IOC டெக்னலாஜியுடன் கூடிய 150cc Eco Thrust எஞ்சின் சிறந்த ஆற்றல் மற்றும் எரிபொருள் சிக்கனத்தை வழங்குவதாகவும், குறைந்த பராமரிப்புடன் நீண்ட எஞ்சின் லைஃபை கொண்டிருக்கும் என்றும் நிறுவனம் கூறுகிறது. இதனிடையே டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் சர்வதேச வர்த்தக துணைத் தலைவர் ராகுல் நாயக் பேசுகையில், TVS HLX சீரிஸ் பல மில்லியன் கணக்கான மக்களின் நம்பிக்கை பெற்ற வாகனமாக மாறியுள்ளது.
3.5 மில்லியன் வாடிக்கையாளர்களின் தினசரி பயன்பாட்டிற்கும் துணையாக உள்ளது. நாங்கள் இதனை 2013-ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தினோம். 6 ஆண்டுகளிலேயே இது ஒரு மில்லியன் (10 லட்சம்) வாடிக்கையாளர்களைப் பெற்றது. கொரோனா காலகட்டம் பல மாதங்கள் நீடித்த சூழலிலும் கூட 2019-க்கு பிறகு அடுத்த 4 ஆண்டுகளில், TVS HLX லைனின் வாடிக்கையாளர் எண்ணிக்கை இரட்டிப்பாகி இருப்பது எங்களை உற்சாகம் கொள்ள செய்துள்ளது என மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
TVS-ன் தரம் மற்றும் சேவைகளில் நம்பிக்கை வைத்துள்ள எங்கள் வாடிக்கையாளர்கள், வணிகக் கூட்டாளர்கள், ஊழியர்கள் மற்றும் அனைவருக்கும் எங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். TVS HLX 150F” ஐ அறிமுகப்படுத்தி இந்த சிறப்பு விற்பனை மைல்கல்லைக் கொண்டாடுகிறோம். எங்கள் வாடிக்கையாளர்களின் குறிப்பிட்ட தேவைகளை மனதில் கொண்டு புதிய HLX 150F மாடல் வடிவமைக்கப்பட்டுள்ளது எனவும் கூறி உள்ளார். டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் ஆசியா, ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் 80-க்கும் மேற்பட்ட நாடுகளில் அதன் தயாரிப்புகளை விற்பனை செய்து வருகிறது. நிறுவனத்தின் வணிகத்தில் ஏற்றுமதிகள் கிட்டத்தட்ட 25 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது.