U19 WC பைனல்.. நாளை மழை வாய்ப்பு மற்றும் ஆடுகளம் எப்படி இருக்கும்?.. முழு புள்ளி விபரங்கள்

19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பைத் தொடர் தற்போது தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது.

இந்த தொடரின் அரையிறுதி போட்டிகள் நேற்று முன்தினம் நடைபெற்று முடிவுக்கு வந்தது. முதல் அரையிறுதியில் தென் ஆப்பிரிக்க அணியை இந்திய அணியும், இரண்டாவது அரையிறுதியில் பாகிஸ்தான் அணியை ஆஸ்திரேலியா அணியும் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று இருக்கின்றன.

இந்திய அணி தொடர்ச்சியாக ஐந்து முறை 19 வயது உட்பட்டவர்களுக்கான உலகக்கோப்பை தொடரின் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுஇருக்கிறது. மேலும் நடப்பு சாம்பியன் ஆகவும் இந்திய அணியே இருக்கிறது.

இதுவரையில் இந்த இரண்டு அணிகளும் 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான உலகக்கோப்பையில் மொத்தம் மூன்று முறை இறுதிப் போட்டியில் சந்தித்திருக்கின்றன. இதில் இரண்டுமுறை இந்தியாவும் ஒருமுறை ஆஸ்திரேலியாவும் வெற்றி பெற்று இருக்கிறது.

இந்த தொடரின் இரண்டு அரையிறுதி போட்டிகளும் பெனோனி வில்லோமூர் மைதானத்தில் நடைபெற்றன. இதே மைதானத்தில்தான் இறுதிப் போட்டியும் நடைபெற இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

நடந்து முடிந்த இரண்டு அரையிறுதி போட்டிகளிலும் புதிய பந்தில் வேகப்பந்து வீச்சுக்கு நல்ல சாதகங்கள் இருந்தது. மேலும் இங்கு வேகப்பந்துவீச்சாளர்கள் நிறைய விக்கெட்டுகள் கைப்பற்றி இருக்கிறார்கள். இரண்டு அரை இறுதி போட்டிகளுமே குறைந்த ஸ்கோர் கொண்ட போட்டிகள் ஆகவே நடந்து முடிந்திருக்கிறது.

எனவே இறுதிப் போட்டியும் இப்படித்தான் இருக்கும். அதே சமயத்தில் பந்து தேய்ந்த பிறகு சுழல் பந்துவீச்சிக்கும் சாதகங்கள் இருக்கிறது. இந்த வகையில் இந்திய அணி நல்ல சுழற் பந்துவீச்சு கூட்டணியை வைத்திருக்கிறது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *