இன்று தொடங்கும் யு19 உலகக்கோப்பை.. மீண்டும் சாதிக்குமா இந்தியா? இந்திய அணி வீரர்கள் விவரம்!

16 நாடுகள் பங்கேற்கும் ஐசிசி யு19 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று தொடங்கவுள்ளது. முதல் போட்டியில் அயர்லாந்து அணியை எதிர்த்து அமெரிக்கா களமிறங்குகிறது.

ஐசிசி யு19 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று தொடங்கவுள்ளது. தென்னாப்பிரிக்காவில் நடக்கவுள்ள யு19 உலகக்கோப்பை தொடருக்கான அட்டவணை கடந்த மாதம் வெளியிடப்பட்டது. முதலில் இலங்கையில் நடத்தவிருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில், ஐசிசி ஒழுங்கு நடவடிக்கை காரணமாக கடைசி நேரத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு மாற்றம் செய்யப்பட்டது. இன்று நடக்கவுள்ள முதல் லீக் போட்டியில் குரூப் ஏ பிரிவில் இடம்பெறுள்ள அயர்லாந்து – அமெரிக்கா அணிகள் மோதவுள்ளன.

மொத்தமாக 16 அணிகள் உலகக்கோப்பை தொடரில் பங்கேற்றுள்ளன. இன்று தொடங்கி பிப்ரவரி 11ஆம் தேதி வரை யு19 உலகக்கோப்பை தொடர் நடக்கவுள்ளது. இதில் இந்திய அணியை பொறுத்தவரை வங்கதேசம், அயர்லாந்து, வங்கதேசம், மற்றும் அமெரிக்கா ஆகிய அணிகள் இடம்பிடித்துள்ள ஏ குரூப்பில் இடம்பெற்றுள்ளது. 4 குரூப்-களாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு அணியும் மற்ற அணிகளுடன் ஒருமுறை மோதும் வகையில் போட்டிகள் திட்டமிடப்பட்டுள்ளன.

அதன்பின் 4 குரூப்-களில் இருந்து தலா 3 அணிகள் சூப்பர் 6 சுற்றுக்கு முன்னேறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சூப்பர் 6 சுற்றுக்கு பின் அரையிறுதி மற்றும் இறுதிப்போடி நடக்கவுள்ளது. பிப்.6 மற்றும் பிப்.8 ஆகிய தேதிகளில் அரையிறுதி போட்டிகளும், பிப்.11ஆம் தேதி இறுதிப்போட்டியும் நடக்கவுள்ளது. அதேபோல் அந்த 3 போட்டிளுக்கும் ரிசர்வ் நாள் இருக்கும் என்றும் ஐசிசி அறிவித்துள்ளது. இந்திய அணியை பொறுத்தவரை ஜனவரி 20ல் வங்கதேச அணியை எதிர்த்து விளையாடவுள்ளது.

அதேபோல் ஜனவரி 25ல் அயர்லாந்து அணியையும், ஜனவரி 28ல் அமெரிக்கா அணியையும் எதிர்த்து விளையாடவுள்ளது. அதேபோல் மொத்தமாக 41 போட்டிகள் நடத்தப்படவுள்ளது. இதற்காக 5 மைதானங்கள் தயார் செய்யப்பட்டுள்ளன. யு19 உலகக்கோப்பை தொடரில் இதுவரை இந்திய அணி 5 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. 2000, 2008, 2012, 2018 மற்றும் 2022 ஆகிய ஆண்டுகளில் வென்றுள்ளன. கடந்த முறை உலகக்கோப்பை தொடரை யாஷ் துல் தலைமையிலான இந்திய யு19 அணி வென்றது.

இதனால் இந்திய அணி மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. நடப்பாண்டில் இந்திய அணி உதய் சஹரன் தலைமையில் பயணிக்கிறது. அதேபோல் அண்மையில் முடிந்த ஐபிஎல் ஏலத்தில் யு19 இந்திய அணியின் விக்கெட் கீப்பர் ஆரவல்லி அவனிஷை சிஎஸ்கே அணி ஏலத்தில் வாங்கியது. இதனால் இவரின் செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு சிஎஸ்கே ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

இந்திய அணி விவரம் : உதய் சஹரன், ஆதர்ஷ் சிங், ஆரவல்லி அவனிஷ், இன்னேஷ் மஹாஜன், ருத்ரா படேல், சச்சின் தாஸ், பிரியன்ஷி மோலியா, அர்ஷின் குல்கர்னி, முஷீர் கான், முருகன் அபிஷேக், தனுஷ் கவுடா, ராஜ் லிம்பானி, சவுமி பாண்டே, ஆராத்யா சுக்லா, நமன் திவாரி,

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *