ஐக்கிய அரபு அமீரகத்தில் பள்ளிகளுக்கு மூன்று வார விடுமுறை அறிவிப்பு
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள பள்ளிகளுக்கு மூன்று வாரங்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விடுமுறை மார்ச் 25-ஆம் திகதி தொடங்கி ஏப்ரல் 14-ஆம் திகதி முடிவடைகிறது.
உல்-பித்ர் ஆகியவற்றுடன் ஒத்துப்போகிறது.
விடுமுறைக்கு பின் ஏப்ரல் 15-ஆம் திகதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
2024-25ஆம் கல்வியாண்டுக்கான காலண்டரின்படி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ரம்ஜான் மாதத்தின் பாதியில் தொடங்கும் விடுமுறை, பண்டிகைக்குப் பிறகு மேலும் ஐந்து நாட்களுக்கு தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு ரம்ஜான் மாதம் மார்ச் 11 அல்லது 12-ஆம் திகதி தொடங்கும். ஜனவரி 2-ஆம் திகதி துவங்கிய இரண்டாம் செமஸ்டரில், மாணவர்களுக்கு 59 படிப்பு நாட்கள் கிடைக்கும்.
இதற்கிடையில், துபாயில் உள்ள தனியார் பள்ளிகள் ரமலான் மற்றும் ஈத்-உல்-பித்ர் விடுமுறைக்குப் பிறகு ஏப்ரல் 15-ஆம் திகதி மீண்டும் வகுப்புகளைத் தொடங்குவதாக அறிவித்துள்ளன.
கல்வியாண்டு ஜூன் 28க்கு முன் முடிவடையாது என அறிவு மற்றும் மனித மேம்பாட்டு ஆணையம் (KHDA) அதன் இணையதளம் மூலம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், UAE அதிகாரிகள் ரம்ஜான் மற்றும் ஈத்-உல்-பித்ர் நாட்களை அறிவித்த பிறகு, KHDA விடுமுறை திகதிகளை அறிவிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.