Udhayanidhi Vs Nirmala Sitharaman: ‘அப்பன் என்பது கெட்டவார்த்தையா? உதயநிதி கேள்வி!
சென்னை கோட்டூர்புரத்தில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடன் வழங்கும் நிகழ்ச்சிக்கு பிறகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள மகளிருக்கு 125 கோடி ரூபாய் வங்கி கடன் வழங்கப்படுள்ளது. சென்ற ஆண்டு 28 ஆயிரம் கோடி ரூபாய் கடன் கொடுத்தோம். இந்தாண்டு 30 ஆயிரம் கோடி ரூபாய் கடன் கொடுப்பதை இலக்காக கொண்டு செயல்பட்டு வருகிறோம் என கூறினார்.
உதயநிதியின் பேச்சுக்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் எதிர்ப்பு தெரிவித்துள்ளது குறித்த கேள்விக்கு, நான் ஏதாவது கெட்டவார்த்தை சொன்னேனா, மரியாதைக்குரிய நிதியமைச்சருக்கு மீண்டும் நான் மரியாதையாக நான் கேட்பது அவர், தமிழ்நாட்டில் ஏற்பட்ட வெள்ளத்தை பேரிடர் என்று ஒத்துக் கொள்ள மறுக்கிறார்கள். இதை தமிழ்நாட்டு மக்கள் உணர வேண்டும், ஒன்றிய குழுவை அனுப்பினார்கள், அவர்கள் தமிழ்நாடு அரசு சிறப்பாக செய்ல்பட்டதாக சொன்னார்கள் ஆனால் அரசியலுக்காக நிர்மலா சீதாராமன் சரியாக செயல்படவில்லை என கூறுகிறார்கள்.
நான் யாரையும் மரியாதை குறைவாக பேசியதாக நான் கருதவில்லை, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், தூத்துக்குடி, நெல்லை மாவட்ட மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளார்கள். அவர்கள் இன்னும் பாதிப்புகளில் இருந்து வெளியே வரவில்லை. ஏரல் பகுதியில் இன்னும் தண்ணீர் தேங்கி நிற்கிறது. நேற்று முன் தினம் தூத்துக்குடியில் உள்ள மக்களை சந்தித்தேன். தண்ணீர் வடியாத பகுதிகளில் மோட்டார்கள் மூலம் தண்ணீர் இறைக்கப்பட்டு மீட்பு பணிகள் நடந்துள்ளது. மீண்டும் நான் தூத்துக்குடி செல்ல உள்ளேன். நம்முடைய வரியைத்தான் ஒன்றிய அரசுக்கு கொடுத்துள்ளோம், அதைத்தான் நிவாரண நிதியாக கேட்கிறோம்.
மத்திய நிதி அமைச்சர் உட்பட நான் யாரையும், தரக்குறைவாக பேசவில்லை; அப்பன் என்று சொல்வது கெட்டவார்த்தையா?; அதை தெரியாமல்தான் கேட்கிறேன். மரியாதைக்குரிய ஒன்றிய நிதியமைச்சர் உடைய மரியாதைக்குரிய அப்பா, வணக்கத்திர்குரிய அப்பா, மாண்புமிகு அப்பா என எப்படி வேண்டுமானலும் சொல்லலாம்.