ஒரே நாளில் உக்ரைன் 234 வீரர்கள் சண்டையில் மரணம்! ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தகவல்
உக்ரைனின் ஊடுருவலை முறியடிக்கும் முயற்சியில், அந்நாட்டின் 234 வீரர்களை கொன்றதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
ரஷ்ய பாதுகாப்பு படைகள்
உக்ரைன் வீரர்களின் ஊடுருவலை முறியடிக்கும் வகையில் ரஷ்ய பாதுகாப்பு படைகள் ஈடுபட்டு வருகின்றன.
செவ்வாயன்று நடந்த சண்டையில், உக்ரைன் வீரர்கள் 234 பேர் தங்கள் படைகளால் கொல்லப்பட்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், ரஷ்யா ராணுவம் மற்றும் எல்லைப் படைகள் தாக்குபவர்களை நிறுத்தவும், எல்லை தாண்டிய தாக்குதலைத் தவிர்க்கவும் முடிந்தது என கூறப்பட்டுள்ளது.
மேலும், தாக்குதல் நடத்தியவர்கள் 7 டாங்கிகள் மற்றும் 5 கவச வாகனங்களை இழந்ததாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குர்ஸ்க் மற்றும் பெல்கோரோட்
ரஷ்யாவின் குர்ஸ்க் மற்றும் பெல்கோரோட் பிராந்தியங்களில் என்ன நடக்கிறது என்பதை உறுதியாகக் கண்டறிய முடியவில்லை என்று கூறப்படுகிறது.
அப்பகுதிகளில் எல்லை தாண்டிய தாக்குதல்கள் போர் தொடங்கியதில் இருந்து அவ்வப்போது நிகழ்ந்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.