பெண்களின் கருப்பையை பலப்படுத்தும் உளுந்தங்கஞ்சி ரெசிபி.!

உளுந்தில் இரும்புச்சத்து, புரதச்சத்து, ஜிங்க், நார்ச்சத்து, மெக்னீசியம், பொட்டாசியம் என ஏராளமான ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன.

பொதுவாக உளுந்தை பெண்கள் பருவம் அடையும்போதும், பேறுகாலத்திற்குப் பின்பும் அதிகம் எடுத்துக்கொள்ள பரிந்துரைக்கப்படுகிறது. இதற்குப் பின் பல மருத்துவ காரணங்கள் உள்ளன. அதாவது பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலியைக் குறைக்கவும், கருப்பையைப் பலப்படுத்தவும், குழந்தைப் பேறினை அதிகரிக்கவும் உளுந்து பயன்படுகிறது.

ஆகையால் தான், இட்லி மாவு, தோசை மாவு, வடை, கஞ்சி தயாரிப்பில் முக்கிய பகுதிப் பொருளாக உளுந்து உள்ளது. வாரம் ஒருமுறை இந்த உளுந்து கஞ்சியை குடித்து வந்தால் கருப்பை கோளாறு இல்லாமல் தடுக்கலாம். இந்த உளுந்தங்கஞ்சியானது பெண்களுக்கு வலு சேர்ப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.

அப்படி பெண்களுக்கு பல ஆரோக்கிய நன்மைகளை அள்ளித்தரும் உளுந்தங்கஞ்சியை வீட்டிலேயே எப்படி செய்யலாம் என்று இங்கே பார்ப்போம்.

தேவையான பொருட்கள் :

உளுந்தம்பருப்பு – 1 கப்

அரிசி மாவு – 2 ஸ்பூன்

துருவிய வெல்லம் -1 கப்

தேங்காய்ப் பால் – 1 கப்

துருவிய தேங்காய் – அரை மூடி

நல்லெண்ணெய் – 1 ஸ்பூன்

வெந்தயம் – 1 ஸ்பூன்

ஏலக்காய்ப்பொடி – 1 டீஸ்பூன்

சுக்கு பொடி – 1/4 ஸ்பூன்

செய்முறை :

முதலில் உளுந்தை எடுத்து நன்கு சுத்தம் செய்து கொள்ளவும்.

உளுந்துடன் வெந்தயம் சேர்த்து 3 மணிநேரம் தண்ணீரில் ஊறவைக்கவும்.

இரண்டும் நன்கு உறியவுடன் ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு அரைத்துக் கொள்ளவும்.

பின்பு அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் அரைத்துவைக்கப்பட்ட உளுந்து மற்றும் வெந்தயத்துடன் தேங்காய்ப்பால் சேர்த்து ஊற்றிக்கொள்ளவும்.

பிறகு அதில் நுணுக்கிய ஏலக்காய், வெல்லம், சுக்குப்பொடி ஆகியவற்றை சேர்த்து நன்கு கிளறிவிடவும்.

அடுத்து அதில் 2 ஸ்பூன் அரிசி மாவை சேர்த்து 15 நிமிடங்களுக்கு சமைக்கவும்.

கஞ்சி தயாராகியவுடன் மற்றொரு அடுப்பில் ஒரு கடாய் வைத்து சூடானதும் நல்லெண்ணெய் ஊற்றி அதில் துருவிய தேங்காய் சேர்த்து தாளித்து கஞ்சியில் சேர்த்து இறக்கினால் சுவையான உளுந்தங்கஞ்சி தயார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *