அம்…மாடியோவ்… ஒரே நாளில் ரூ3.17 கோடி உண்டியல் வசூல்… திருப்பதிக்கே டஃப் கொடுக்கும் அயோத்தி ராமர்… !

லக அளவில் ஒரு நாள் கோவில் வருமானம் ஆந்திராவில் உள்ள பிரசித்தி பெற்ற ஏழுமலையான் ஆலயத்தில் தான். இங்கு தினமும் சராசரியாக சுமார் ரூ3.5 கோடி அளவிற்கு உண்டியல் காணிக்கை செலுத்தப்பட்டு வருகிறது.

விசேஷ நாட்களில் இது 4 கோடியைத் தாண்டுகிறது. தமிழகம், ஆந்திரா, கேரளா, தெலங்கானா, கர்நாடகா மாநிலங்களில் இருந்து மட்டுமின்றி, வடமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு தினசரி வந்து செல்கின்றனர்.

இந்நிலையில் உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் ஜனவரி 22ம் தேதி அயோத்தி ராமர் கோயில் திறக்கப்பட்டது. இதனையடுத்து அங்கு பொதுமக்களுக்கு தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. முதல் நாளில் விவிஐபிக்கள் மட்டும் தரிசித்த நிலையில் அடுத்த நாள் முதல் பொதுமக்கள் தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். தற்போது அயோத்தி நகரம் முழுவதும் கடும் கூட்ட நெரிசல் நிலவி வருகிறது. நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்து வருகின்றனர். இதனால் அங்கு கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது.

முதல் நாளில் சுமார் 5.5 லட்சம் பேர் ராமர் கோயிலில் தரிசனம் செய்துள்ள நிலையில் கோவில் வருமானம் 3.17 கோடி என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது திருப்பதி கோயிலுக்கு இணையான வசூல். திருப்பதியை போல ஆண்டுமுழுவதும் அயோத்தியில் பக்தர்கள் தரிசனம் இருக்குமா என்ற எதிர்பார்ப்பு உருவாகத் தொடங்கியுள்ளது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *