எதிர்பார்க்காத ட்விஸ்ட்.. பாண்டியா சோலியை முடிக்கப் போகும் பிசிசிஐ.. டி20 உலகக்கோப்பையில் கல்தா?

மும்பை : டி20 அணியின் வருங்கால கேப்டன் என கூறப்பட்டு வந்த ஹர்திக் பாண்டியாவுக்கு எதிராக பிசிசிஐ காய் நகர்த்தி வருவதாக தெரிகிறது. தற்போது நடந்து வரும் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடரில் பாண்டியாவிற்கு மாற்று வீரராக கருதப்படும் சிவம் துபேவை முக்கிய ஆல் – ரவுண்டராக பயன்படுத்தி வருவதில் பிசிசிஐ பங்கு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஹர்திக் பாண்டியா கடந்த ஏழு ஆண்டுகளாக இந்திய அணியின் முக்கிய ஆல் – ரவுண்டராக இருக்கிறார். சுழற் பந்துவீச்சு ஆல் – ரவுண்டராக பல வீரர்கள் இந்திய அணியில் ஆட காத்துக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால், வேகப் பந்துவீச்சு ஆல் – ரவுண்டராக ஆட இதுவரை பாண்டியாவை தவிர வேறு யாரும் அந்த இடத்துக்கு சரியாக அமையவில்லை.

சிவம் துபே ஐபிஎல் தொடர் மற்றும் மும்பை மாநில அணிக்காக வேகப் பந்துவீச்சு ஆல் – ரவுண்டராக ஆடி வரும் நிலையில் அவர் இதுவரை இந்திய அணியில் சரியான வாய்ப்பை பெறாமல் இருந்து வந்தார். தற்போது ஹர்திக் பாண்டியா காயத்தில் இருந்து மீண்டு வந்து கொண்டு இருக்கும் நிலையில், பாண்டியாவுக்கு மாற்றாக சிவம் துபே இந்திய அணியில் இடம் பெற்று இருக்கிறார்.
எனவே, 2024 டி20 உலகக்கோப்பை வரை பாண்டியாவை நம்பிக் கொண்டு இருக்காமல், அவருக்கு மாற்று வீரரை தயார் செய்ய வேண்டும் என்ற முடிவில் இருக்கும் பிசிசிஐ, சிவம் துபேவை ஆப்கானிஸ்தான் டி20 தொடரில் தேர்வு செய்து இருப்பதாக கூறப்படுகிறது. அவரை பந்துவீச்சில் பயன்படுத்த வேண்டும் என கேப்டன் ரோஹித் சர்மாவிடம் பிசிசிஐ உயர்மட்ட அதிகாரிகள் கூறி இருப்பதாகவும், அதனால் தான் ஆப்கானிஸ்தான் தொடரில் குறைந்தது 2 ஓவர்கள் சிவம் துபேவுக்கு ரோஹித் அளித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
பாண்டியா போல பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்ட சிவம் துபே ஆப்கானிஸ்தான் தொடரில் இதுவரை இரண்டு போட்டிகளில் ஆடும் இரண்டிலும் 60 மற்றும் 63 ரன்கள் குவித்து இருந்தார்.
அடுத்து பந்துவீச்சில் இரண்டு போட்டிகளில் தலா 1 விக்கெட் வீழ்த்தி இருக்கிறார். ஒரளவு பாண்டியாவுக்கு மாற்றாக தன்னை நிரூபிக்கத் துவங்கி இருக்கிறார் சிவம் துபே. இந்த நிலையில், 2024 டி20 உலகக்கோப்பை தொடரில் பாண்டியா இடம் பெறுவது அவரது பந்துவீசும் திறனைப் பொறுத்தே அமையும் என கூறப்படுகிறது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *