எதிர்பார்க்காத ட்விஸ்ட்.. ஹர்திக்கிற்கு ஆப்பு.. ரோஹித்துக்காக களத்தில் இறங்கிய மும்பை இந்தியன்ஸ்

மும்பை : டி20 அணித் தேர்வில் எதிர்பார்க்காத திருப்பமாக ரோஹித் சர்மாவை இந்திய அணியின் கேப்டனாக நியமிக்க வேண்டும் என அவரது ஐபிஎல் அணியான மும்பை இந்தியன்ஸ் இடம் இருந்து மறைமுக அழுத்தம் ஏற்பட்டு இருக்கிறது.
இதில் மற்றொரு விஷயம் என்னவெனில், ரோஹித் டி20 அணியில் இடம் பெறவில்லை என்றால் ஹர்திக் பாண்டியா தான் இந்திய டி20 அணியின் கேப்டனாக இருந்திருப்பார். ரோஹித் அணியில் இடம் பெற்றாலும் கூட பாண்டியாவை டி20 அணி கேப்டனாக அறிவிக்க வாய்ப்பு உள்ளது. இந்த நிலையில் தான் இந்திய டி20 அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா இடம் பெற வேண்டும் என மறைமுகமாக மும்பை இந்தியன்ஸ் அழுத்தம் கொடுத்துள்ளது.
சில வாரங்கள் முன்பு மும்பை இந்தியன்ஸ் அணி, பத்து ஆண்டுகள் தங்கள் அணியின் கேப்டனாக இருந்த ரோஹித் சர்மாவை நீக்கி விட்டு, ஹர்திக் பாண்டியாவை மும்பை அணி கேப்டனாக அறிவித்தது. அதனால் மும்பை அணி ரசிகர்கள் இடையே பெரும் விமர்சனம் எழுந்தது. பெரும்பாலானோர் பாண்டியா கேப்டனாக வந்ததை விரும்பவில்லை.