அடையாளம் தெரியாத சூரி.. ஒரே போட்டோவில் வடிவேலு, விவேக்.. காமெடியன் கல்யாண போட்டோ வைரல்!
ஒரு படத்தில் ஹீரோ, ஹீரோயினுக்கு எவ்வளவு முக்கியத்துவம் இருக்கிறதோ அதே போன்று மக்கள் மத்தியில் நகைச்சுவை கதாபாத்திரத்திற்கு மவுசு அதிகம். உடல் மொழியாலும், வசனங்களாலும், நேரத்திற்கு ஏற்ற கவுண்டர்களாலும் படம் பார்க்க வரும் ரசிகர்களை வயிறுகுலுங்க சிரிக்க வைப்பது நகைச்சுவை நடிகர்கள் தான். ஒருவரை சுலபமாக அழகூட வைத்துவிடலாம் ஆனால் ஒருவரை சிரிக்க வைப்பது கடினம் என பலர் கூற கேட்டிருப்போம். ஹீரோ , ஹீரோயினுக்காக ஓடிய படங்கள் போய் நகைச்சுவைக்காகவே பல படங்கள் ரசிகர்களால் நிரம்பி வழிந்ததுண்டு. அப்படி சினிமா உலகை பல நகைச்சுவை நடிகர்கள் தங்களின் நயமிக்க நகைச்சுவையால் கட்டிப்போட்டு வைத்திருந்தனர்.
செந்தில், கவுண்டமணி, வடிவேலு, விவேக், குமரிமுத்து, சார்லி, என நகைச்சுவை நடிகர்களின் பட்டியலை சொல்லிக்கொண்டே போகலாம். இதில் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்துவிட்டு சரியான வாய்ப்பு கிடைக்காமல் காலம் மறந்து போன நகைச்சுவை நடிகர்கள் பலர். தமிழ் சினிமாவின் பாப்புலர் நகைச்சுவை நடிகர்கள் இன்றும் மக்கள் மனதில் பதிந்திருப்பவர்களில் செந்தில், கவுண்டமணி, விவேக், வடிவேலு, போன்று பலரின் நகைச்சுவை இன்றும் மக்களின் பேவரைட் காமெடியாக உள்ளது.
நடிகர் முத்து காளையின் திருமண புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. முத்து காளையின் திருமண விழாவில் தமிழ் சினிமாவின் காமெடி நடிகர்கள் பலரும் பங்கேற்று குரூப் போட்டோ எடுத்துள்ளனர். வடிவேலு, விவேக், மயில்சாமி, போண்டாமணி மற்றும் பலர் பங்கேற்றுள்ளனர்.
90’ஸ் கிட்ஸ்களின் பல பேவோரைட் நகைச்சுவைக்கு நடிகர்கள் அந்த புகைப்படத்தில் உள்ளதால் இணையத்தில் அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.