அடுத்த வாரம் தாக்கலாகும் மத்திய பட்ஜெட்… என்னென்ன அறிவிப்புகளுக்கு வாய்ப்பு?
மக்களவைத் தேர்தலுக்கு முன்பு வரக்கூடிய பட்ஜெட் என்ற காரணத்தால் மக்களை ஈர்க்கும் நிதிநிலை அறிக்கையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரம் பெரிய அளவிலான மாற்றங்கள் எதுவும், இடைக்கால பட்ஜெட்டில் இருக்க வாய்ப்பு இல்லை எனவும் பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
நாட்டின் வருமானத்துக்கும் செலவினத்துக்கும் இடையேயான இடைவெளி 6.4 சதவீதம் என உள்ளது. இதை குறைக்க, கல்வி, உள்கட்டமைப்பு உள்ளிட்ட துறைகளுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து நிதி ஒதுக்க வேண்டும் என பொருளாதார நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
மேலும், சீனா உள்ளிட்ட நாடுகளை சார்ந்திருப்பதை தவிர்த்து, தன்னாட்சியாக உற்பத்தியில் தன்னிறைவு பெற்றுவருவதற்கு, மத்திய அரசின் பல்வேறு சலுகைகள் உதவுவதாகவும் நிபுணர்கள் கூறுகின்றனர். இதனால், வரிச்சலுகைகள் 2, 3 ஆண்டுகளுக்கு நீடிக்க வேண்டும் எனவும் கூறப்படுகிறது. புதிய நிறுவனங்களுக்கான சலுகைகளை, பல்வேறு துறைகளுக்கு விரிவாக்குவதற்கான அறிவிப்பு பட்ஜெட்டில் இடம் பெற வேண்டும் எனவும் பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.