மத்திய இணை அமைச்சர் எல். முருகனின் இல்ல விழாவில் கலந்து கொள்ளும் பிரதமர் நரேந்திர மோடி..!
மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் இல்லத்தில் நாளை (14.1.24) பொங்கல் விழா நடைபெறவுள்ளது. இதில் பிரதமர் மோடி சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள உள்ளதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அந்த விழா அழைப்பிதழில், அன்புடையீர் வணக்கம் நிகழும் சோபகிருது 2024-ம் வருடம் மார்கழி மாதம் 29-ம் நாள் ஜனவரி 14-ம் நாள், ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி அளவில், பாரத பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு சிறப்பிக்கும் பொங்கல் திருவிழாவில் தாங்கள் தங்கள் குடும்பத்தினருடன் கலந்து கொண்டு மகிழ்வுற அன்புடன் அழைக்கிறேன் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விழாவில் தமிழகத்தில் இருந்து முக்கிய அரசியல் பிரமுகர்கள், திரைப்பட பிரபலங்கள் பங்கேற்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.