மாணவிகளின் கன்னித்தன்மையை சோதிக்கும் பல்கலைக்கழகம்., மொபைல் எண்கள் உட்பட ரகசிய தகவல்கள் கசிவு

கன்னித்தன்மை தொடர்பான தகவல்கள் உட்பட பல்கலைக்கழக மாணவிகளின் தனிப்பட்ட தகவல்கள் கசிந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கஜகஸ்தானில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்று அங்கு பயிலும் மாணவிகளின் மருத்துவ பரிசோதனைகள் தொடர்பான பல்வேறு வகையான தரவுகளை சேமிக்கிறது.

அதில் கன்னித்தன்மை பற்றிய தகவல்களும் உள்ளன. 17 முதல் 21 வயதுடைய பெண்களின் கன்னித்தன்மை குறித்த தகவல்களை மருத்துவர்கள் ஏன் சேகரித்தனர் என்பது தெளிவாகத் தெரியவில்லை.

ஆனால் குறைந்தது 190 கல்லூரி மாணவிகளின் பெயர்கள், தொலைபேசி எண்கள், கன்னித்தன்மை மற்றும் tax codes கசிந்தன.

கல்லூரி மாணவிகளின் கன்னித்தன்மை குறித்த தகவல் வெளியானதையடுத்து பல்கலைக்கழகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இது தொடர்பான தகவல்கள் பல்வேறு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும், மாணவர்களின் பெயர்கள் மற்றும் தொலைபேசி எண்களும் வெளியிடப்பட்டன. இந்த பட்டியல் வாட்ஸ்அப் குரூப்களிலும் வலம் வருகிறது.

கஜகஸ்தானில் உள்ள அல் ஃபராபி தேசிய பல்கலைக்கழகத்தில் (Al-Farabi Kazakhstan National University) இந்த சம்பவம் நடந்துள்ளது.

இதனால் பல்கலைக்கழகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. பல்கலைக்கழகத்தில் மாணவர்களின் தனிப்பட்ட தகவல்கள் எந்தளவுக்கு பாதுகாப்பானவை என்ற கேள்வியும் எழுகிறது.

இது தொடர்பாக கஜகஸ்தான் உயர்கல்வி அமைச்சர் சயாசத் பதிலளித்தார். மேலும், இந்த சம்பவம் குறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தனிப்பட்ட தகவல்களை குறிப்பாக மருத்துவ தகவல்களை கசியவிடுவது குற்றம், கல்லூரி மாணவர்கள் தொடர்பான விவரங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது, இந்த சம்பவத்திற்கு காரணமானவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்றார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *