அடங்காத ஹவுதிகள்… செங்கடலில் பற்றியெரியும் பிரித்தானிய எண்ணெய் கப்பல்

செங்கடலில் மீண்டும் ஹவுதி படைகளின் தாக்குதலுக்குப் பிரித்தானிய எண்ணெய் கப்பல் ஒன்று இலக்காகி தீப்பிடித்து எரிவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஹவுதிகளின் ஏவுகணை தாக்குதலுக்கு

பெரும் வர்த்தக நிறுவனமான Trafigura தொடர்புடைய தகவலை உறுதி செய்துள்ளதுடன், தங்களின் கப்பல் Marlin Luanda ஹவுதிகளின் ஏவுகணை தாக்குதலுக்கு இலக்கானதாகவும் குறிப்பிட்டுள்ளது.

அடங்காத ஹவுதிகள்… செங்கடலில் பற்றியெரியும் பிரித்தானிய எண்ணெய் கப்பல் | Houthi Attack British Oil Tanker Catches FireCredit: FRANK FINDLER

லண்டனில் அலுவலகம் அமைந்துள்ள Trafigura நிறுவனம் தெரிவிக்கையில், 250 மீற்றர் நீளம் கொண்ட Marlin Luanda கப்பல் ஊழியர்களிடம் தொடர்ந்து தொடர்பில் இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர்,

மேலும், பாதுகாப்பு கருதி ஊழியர்கள் அனைவரும் உயிர்காக்கும் படகுகளில் ஏறியுள்ளதாகவும், காயங்கள் தொடர்பில் தகவல் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளனர். தொடர்புடைய கப்பலில் நாப்தா எனப்படும் எளிதில் எரியக்கூடிய திரவம் ஏற்றப்பட்டுள்ளதாகவும், தீப்பிடித்து எரிவதால் இன்னும் ஆபத்து என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

அமெரிக்க போர்க்கப்பலை

இதனிடையே, அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் ராணுவ கப்பல்கள் உதவிக்கு விரைந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஏமனில் உள்ள ஏதனில் இருந்து தென்கிழக்கே 60 கடல் மைல் தொலைவில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *