அடங்காத ஹவுதிகள்… பிரித்தானிய சரக்கு கப்பலை கடலில் கைவிட்டு தப்பிய ஊழியர்கள்

பிரித்தானியாவில் பதிவு செய்யப்பட்ட சரக்கு கப்பல் ஒன்று ஏமனில் ஹவுதிகளின் தாக்குதலுக்கு இலக்கான நிலையில், ஊழியர்கள் கப்பலை கைவிட்டு தப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடலில் மூழ்கிய சரக்கு கப்பல்
பாப் அல்-மண்டப் ஜலசந்திக்கு அருகில் ஏதன் வளைகுடாவில் வைத்து Rubymar என்ற சரக்கு கப்பல் ஹவுதிகளின் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளது. இதனையடுத்து, கப்பலைக் கைவிட்டு ஊழியர்கள் தப்பியுள்ளனர்.

இந்த நிலையில், சரக்கு கப்பல் கடலில் மூழ்கியதாக திங்களன்று ஹவுதிகள் அறிவித்தனர். ஆனால் செவ்வாய்க்கிழமை பிரித்தானிய ராயல் கடற்படை சம்பவப்பகுதியில் ஆய்வு முன்னெடுத்த பின்னர், எந்த ஆதாரமும் சிக்கவில்லை என தெரிவித்துள்ளது.

ஹவுதிகள் இதுவரை முன்னெடுத்துள்ள தாக்குதல்களில் Rubymar மீதான தாக்குதல் மிருகத்தனமானது என்றே கூறுகின்றனர். கடந்த ஆண்டு நவம்பர் மத்தியில் இருந்தே சரக்கு கப்பல்கள் மற்றும் மேற்கத்திய போர் கப்பல்கள் மீது ஹவுதிகள் ஏவுகணை மற்றும் ட்ரோன்களால் தாக்குதல் முன்னெடுத்து வருகின்றனர்.

பத்திரமாக மீட்கப்பட்ட ஊழியர்கள்
ஹமாஸ் படைகளை ஒழிப்பதாக கூறி பாலஸ்தீன மக்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதல்களை முன்னெடுத்துவரும் இஸ்ரேலுக்கு எதிராகவே தங்களது நடவடிக்கை என்றும் ஹவுதிகள் தொடர்ந்து குறிப்பிட்டு வருகின்றனர்.

திங்களன்று ஹவுதிகளின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவிக்கையில், Rubymar கப்பல் மிக மோசமாக சேதமடைந்தது என்றும், கடலில் மூழ்கியது என்றும் குறிப்பிட்டுள்ளார். ஆனால் Rubymar கப்பல் கடலில் மூழ்கவில்லை என்பது பின்னர் உறுதி செய்யப்பட்டது.

பிரித்தானிய அரசாங்கம் தரப்பில் தெரிவிக்கையில், ஹவுதிகள் தாக்குதலை அடுத்து, ஊழியர்கள் பத்திரமாக மீட்கப்பட்டதாகவும், கப்பல் வேறுவழியின்றி கைவிடப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளனர். இந்த விவகாரத்தில் இதுவரை அமெரிக்க ரணுவத்திடம் இருந்து கருத்தேதும் வெளியாகவில்லை என்றே கூறப்படுகிறது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *