UNSC: உதவித்தொகையை குறைத்த இந்தியா! ஐநா பாதுகாப்பு சபையின் நடவடிக்கை என்னவாக இருக்கும்?

ஐக்கிய நாடுகள் சபையின் (UN) மிகவும் சக்திவாய்ந்த அமைப்பான UNSC என்பது சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் பொறுப்பு கொண அமைப்பாகும். உலகின் முக்கிய பிரச்சினைகளுக்கு UNSC யிடமிருந்து ஒப்புதல் பெறுவதும் அவசியம். சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பை பராமரிக்க அல்லது எங்கும் தடைகளை விதிக்க UNSCக்கு அதிகாரம் உள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்திர உறுப்பு நாடாக மாற்றுவதில் சீனா மிகப்பெரிய தடையாக மாறிய நிலையில், ​​இந்தியா இப்படி பாடம் கற்பித்தது. இந்தியா UNSC நிரந்தர இருக்கை சீனா: ஐக்கிய நாடுகளின் பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா உரிமை கோருவதில் தடைகளை உருவாக்குவதை சீனா நிறுத்தவில்லை. இந்தியாவும் கடுமையான நடவடிக்கை எடுத்து UNSC க்கு வழங்கப்பட்ட தொகையை பாதியாக குறைத்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர உறுப்புரிமை பெறுவதில் தடைகளை ஏற்படுத்துவதை சீனா நிறுத்தவில்லை. இந்தியாவுக்கு பிரச்சனை ஏற்படுத்தும் எந்தவொரு சந்தர்ப்பத்தையும் சீனா தவறவிடாது. ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சி நிரந்தர உறுப்பினர் பதவியின் அடிப்படையில் சீனா மீது இந்தியா வாய்மொழி தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளது.

வெளிவிவகார அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் முதல் ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்திய தூதர் ருசிரா காம்போஜ் என இந்தியாவுக்குக் ஆதரவாக ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்புரிமையை எந்த மேற்கத்திய நாடுகளும் எதிர்க்கவில்லை என்றும், சீனா மட்டுமே அந்த காரணமாக இருக்கிறது என சுட்டி காட்டுகிறார்கள்.

ஐக்கிய நாடுகள் சபைக்கான பட்ஜெட்டை குறைத்த இந்தியா
பிப்ரவரி 1ஆம் தேதி அறிவிக்கப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில் ஐக்கிய நாடுகள் சபைக்கு அளித்து வந்த உதவியை பாதியாகக் குறைத்துள்ளது இந்தியா. கடந்த ஆண்டு ரூ.382 கோடி உதவி வழங்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டு ரூ.175 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது. சீனாவின் சூழ்ச்சிகளுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியா எடுக்கும் கடினமான நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது.

ஐநா சபையில் இந்தியாவுக்கு சீனா தடை
இந்தியாவின் இந்த நடவடிக்கை, ஐக்கிய நாடுகள் மீதான அழுத்தத்தை அதிகரிப்பதற்கான ஒரு வழியாகவே பார்க்க முடியும் என்று தூதரக விவகாரங்களில் வல்லுநர்கள் கூறுகின்றனர். இந்தியா ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினருக்கான வலுவான போட்டியாளராக உள்ளது, ஆனால் சீனா தனது வீட்டோவைப் பயன்படுத்தி பாதையை கடினமாக்குகிறது.

பிரான்ஸ், ஜெர்மனி, ஜப்பான் போன்ற நாடுகளும் இந்தியாவுக்கு ஆதரவாக உள்ளன. யுஎன்எஸ்சி ஐந்து நிரந்தர உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா, ரஷ்யா மற்றும் பிரான்ஸ் மற்றும் 10 நிரந்தரமற்ற உறுப்பினர்கள் ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் உள்ளனர்.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *