ஓராண்டில் 60% வரை ரிட்டன்: 2024 பெஸ்ட் மியூச்சுவல் பண்ட் திட்டங்கள்!
பொதுவாக இந்தத் திட்டங்கள் வருமானம் அடிப்படையில் முதலீட்டாளர்களின் தேர்வாக இருக்கும். எனினும், இதில் பல்வேறு அடிப்படை காரணிகளும் உள்ளன.
மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டு திட்டங்கள் சந்தையை அடிப்படையாக கொண்டவை. இதில் இடர்பாடுகள் அதிகம் என்பதையும் முதலீட்டாளர்கள் கவனத்தில் கொள்ளல் வேண்டும். இதில் முதலீடு செய்யும் முன், இதில் உள்ள சாதக- பாதக அம்சங்கள் குறித்து அறிந்து கொள்வதும் அவசியம்.
மேலும், பொதுவாக மற்ற முதலீட்டு திட்டங்களுடன் ஒப்பிடுகையில் மியூச்சுவல் ஃபண்ட்கள் நல்ல வருமானத்தை அளிக்கின்றன. இதனால் வருமானத்தின் அடிப்படையில் இதில் முதலீடு செய்யும் நபர்கள் அதிகமாக உள்ளனர். கடந்த காலங்களில் இந்தியாவில் மியூச்சுவல் ஃபண்ட் சந்தை நல்ல வளர்ச்சியை கண்டுள்ளது. இதனை, புள்ளிவிவர அறிக்கைகள் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது.