68 சதவீதம் வரை ரிட்டன்: இந்த 4 மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் தெரியுமா?

Mutual Fund | மியூச்சுவல் ஃபண்ட் சந்தையில் 10 ஆண்டுகளை நிறைவு செய்த சுமார் 146 பங்குத் திட்டங்கள் உள்ளன.

நிப்பான் இந்தியா ஸ்மால் கேப் ஃபண்ட், நிர்வகிக்கப்படும் சொத்துக்களின் அடிப்படையில் ஸ்மால் கேப் பிரிவில் உள்ள மிகப்பெரிய திட்டம் ஆகும்.

இது முதலீட்டாளர்களின் செல்வத்தை 12.06 மடங்கு அதிகரித்துள்ளது. அதாவது, இந்த ஃபண்டில் செய்யப்பட்ட ரூ. 1 லட்சத்தின் மொத்த முதலீடு, 10 ஆண்டு கால இடைவெளியில் 28.27% CAGR உடன் ரூ.12.06 லட்சமாக வளர்ந்திருக்கும்.

இந்த நிலையில் சில மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் 49.61 சதவீதம் வருமானம் கொடுத்துள்ளன. நாம் தற்போது 60 சதவீதம் வரை ரிட்டன் கொடுத்த மியூச்சுல் ஃபண்ட் திட்டங்கள் குறித்து பார்க்கலாம்.
இந்தத் தகவல்கள் ஏஎம்எஃப்ஐ அறிக்கை படி கொடுக்கப்பட்டு உள்ளது.

பந்தன் ஸ்மால் கேப் ஃபண்ட்: கடந்த ஓராண்டில் பந்தன் ஸ்மால் கேப் ஃபண்ட் திட்டங்கள் 68.08 சதவீதம் ரிட்டன் கொடுத்துள்ளன.

மகிந்திரா மேனுலைப் ஸ்மால் கேப் ஃபண்ட்: இந்தத் திட்டங்கள் கடந்த ஓராண்டில் 66.48 சதவீதம் ரிட்டன் கொடுத்துள்ளன.

குவாண்ட் ஸ்மால் கேப் ஃபண்ட் : இந்தத் திட்டங்கள் 63.59 சதவீதம் உயர்வு கொடுத்துள்ளன.

ஐடிஐ ஸ்மால் கேப் ஃபண்ட் : இந்தத் திட்டங்கள் 62.86 சதவீதம் ரிட்டன் கொடுத்துள்ளன.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *