9.5% வரை வட்டி.. அள்ளிக்கொடுக்கும் வங்கிகள்.. மூத்த குடிமக்களுக்கான FD விவரம்!
சீனியர் சிட்டிசன் ஃபிக்ஸட் டெபாசிட்ஸ் (Senior Citizen Fixed Deposits) என்பது 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கான சிறப்பு வட்டி விகிதங்கள் கொண்ட டெர்ம் டெபாசிட் திட்டமாகும். இந்தியாவில் மூத்த குடிமக்களுக்கான (FD வட்டி விகிதம் வங்கிக்கு வங்கி மாறுபடும்).
60 வயதிற்கு குறைவான பொது மக்களுக்கு வழங்கப்படுவதை விட 0.50% கூடுதல் வட்டி விகிதம் தவிர, இந்த SCFD-க்கள் (சீனியர் சிட்டிசன் ஃபிக்ஸட் டெபாசிட்) முதியோர்களுக்கு பல சலுகைகளையும் வழங்குகின்றன. இதனிடையே பிப்ரவரி 3, 2024 அன்று முடிவடைந்த வாரத்தில் சில வங்கிகள் தங்களுடைய FD-க்கான வட்டி விகிதங்களை மாற்றியுள்ளன. மூத்த குடிமக்களுக்கான FD-க்களுக்கு சிறந்த வட்டி விகிதங்களை வழங்கும் சில வங்கிகளை பார்ப்போம்.
யூனிட்டி ஸ்மால் ஃபைனான்ஸ் பேங்க் (Unity Small Finance Bank) :
இந்த வங்கி கடந்த பிப்ரவரி 2, 2024 அன்று வட்டி விகிதங்களைத் திருத்தியது.பொதுவாக பெரிய வங்கிகளை விட சிறிய நிதி வங்கிகள் அதிக வட்டி விகிதங்களை வழங்குகின்றன. அந்த வகையில் Unity Small Finance Bank-ஆனது 1,001 நாட்கள் மெச்சூரிட்டி பீரியட் கொண்ட FD-க்களுக்கு 9.50% வரை வட்டி வழங்குகிறது. இந்த வங்கி 6 மாதங்களுக்கும் மேல் – 201 நாட்களில் மெச்சூரிட்டியாகும் மூத்த குடிமக்களுக்கான FD-க்களுக்கு 9.25% வட்டி வழங்குகிறது. மூத்த குடிமக்களுக்கான 501 நாள் FD-க்களுக்கு இந்த வங்கி 9.25% மற்றும் 701 நாட்களுக்கு 9.45% வட்டியை வழங்குகிறது.
பஞ்சாப் & சிந்து வங்கி (Punjab & Sind Bank) :
இந்த வங்கி கடந்த பிப்ரவரி 1 அன்று வட்டி விகிதங்களைத் திருத்தியது. 444 நாட்கள் மெச்சூரிட்டி பீரியட் கொண்ட சீனியர் சிட்டிசன் FD-க்களுக்கு, இந்த வங்கி 8.10% வட்டியை வழங்குகிறது. இந்த சிறப்பு FD வரும் 31 மார்ச் 2024 வரை செல்லுபடியாகும்.
கரூர் வைஸ்யா வங்கி (Karur Vysya Bank) :
KVB-யின் சிறப்பு FD கடந்த பிப்ரவரி 1, 2024 அன்று திருத்தப்பட்டது. இந்த வங்கி 444 நாள் மெச்சூரிட்டி பீரியட் கொண்ட சீனியர் சிட்டிசன்களுக்கான FD-க்கு அதிகபட்சமாக 8% வட்டியை வழங்குகிறது.
மூத்த குடிமக்களுக்கான பஞ்சாப் நேஷனல் வங்கியின் (PNB) FD விகிதங்கள் :
இந்த வங்கி பிப்ரவரி 1, 2024 அன்று தனது வட்டி விகிதங்களை திருத்தியது. PNB வங்கி வழங்கும் 400 நாட்கள் மெச்சூரிட்டி பீரியட் கொண்ட சீனியர் சிட்டிசன் எஃப்.டி மீது அதிகபட்சமாக 7.75% வட்டி வழங்கப்படுகிறது. அதே போல PNB வங்கியானது பொது மக்கள், மூத்த குடிமக்கள் மற்றும் சூப்பர் சீனியர்களுக்கான 300 நாட்கள் FD டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதத்தை 80 பேசிஸ் பாயிண்ட்ஸ்களை உயர்த்தியுள்ளது. இந்த அதிகரிப்பு மூத்த குடிமக்களுக்கு 7.55 சதவீதமும், சூப்பர் சீனியர் சிட்டிசன்களுக்கு 7.85 சதவீதமும் வருமானத்திற்கு உத்தரவாதம் அளிக்கும்.