அஜித் ரசிகர்களுக்கு அப்டேட் கொடுத்த நெட்பிளிக்ஸ்; என்னவா இருக்கும்?
வீரம், வேதாளம், விஸ்வாசம், வலிமை. துணிவு வரிசையில் நடிகர் அஜித் குமார் நடிக்கும் புதிய படத்துக்கு விடா முயற்சி என தமிழில் அழகிய பெயர் சூட்டப்பட்டுள்ளது.
மகிழ் திருமேனி இயக்கிவரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு காட்சிகள் அஜர்பைஜான் நாட்டில் நடைபெறுகின்றன. படத்தில் அஜித் குமாருடன், திரிஷா, அர்ஜூன், ரெஜினா, சந்தீப் கிஷன் உள்ளிட்டோரும் நடித்துவருகின்றனர்.
படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இந்தப் படம் திரையில் வெளியான பின்பு ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது. இதற்கான உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது.
விடா முயற்சி திரைப்படம் தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வெளியாகிறது. விடா முயற்சி படத்தின் ஒடிடி உரிமையை கைப்பற்றியதை நெட்பிளிக்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.