ஃபாஸ்ட் டேக் கார்டை இன்றே அப்டேட் பண்ணுங்க! நாளை முதல் அப்டேட் செய்யப்படாத கார்டுகள் செல்லாது!

இந்தியாவில் அனைத்து வாகன ஓட்டிகளும் தங்கள் ஃபாஸ்ட் டேக் கார்டை கேஒய்சி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இப்படியாக ஃபாஸ்ட் டேக் கார்டுகளுக்கு கேஒய்சி செய்ய இன்றே கடைசி தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 1ம் தேதி முதல் கேஒய்சி செய்யப்படாத கார்டுகள் செயல் விளக்கம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
தற்போது சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணத்தை செலுத்த ஃபாஸ்ட் டேக் கார்டை தான் பெரும்பாலான வாகனங்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்தியாவில் செயல்படும் நூற்றுக்கு 96 வாகனங்களில் இந்த ஃபாஸ்ட் டேக் கார்டு என்பது அமலுக்கு வந்துவிட்டது. ஆனால் இதில் ஒரு சிக்கல் என்னவென்றால் ஒரு வாகனம் ஒன்றுக்கும் மேற்பட்ட ஃபாஸ்டேக் காடுகளை பயன்படுத்தி வருகின்றனர்.
இதனால் அரசுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் பல்வேறு நிர்வாக சிக்கல்கள் ஏற்பட்டுள்ளது. இதனால் மத்திய அரசு ஒரு வாகனத்திற்கு ஒரு ஃபாஸ்ட் டேக் கார்டு தான் இருக்க வேண்டும் என்பதை அறிவுறுத்தியுள்ளது. இதை அமல்படுத்துவதற்காக ஒவ்வொரு வாகன ஓட்டையும் தங்கள் ஃபாஸ்ட் டேக் கார்டை கேஒய்சி செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இப்படியாக பலர் ஏற்கனவே தங்கள் கார்டுகளை கேஒய்சி செய்து விட்டனர்.
இந்நிலையில் ஃபாஸ்ட்டேக் கார்டுகளை கேஒய்சி செய்ய இன்றே கடைசி தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 31-ஆம் தேதிக்குள் ஃபாஸ்ட் டேக் கார்டுகளை கேஒய்சி செய்து விடலாம். பிப்ரவரி 1ம் தேதிக்கு பிறகு கேஒய்சி செய்யப்படாத கார்டுகள் ஒன்றொன்றாக பிளாக் லிஸ்ட் செய்யப்படும். அல்லது செயலிழக்கம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படியாக பிளாக் லிஸ்ட் அல்லது செயலிழகம் செய்யப்பட்டு விட்டால் அந்த கார்டை பயன்படுத்த முடியாது.
பிப்ரவரி ஒன்றாம் தேதி முதல் கேஒய்சி செய்யப்பட்ட கார்டுகள் மூலமே ஃபாஸ்ட் டேக் கார்டு மதுலம் டோல்கேட்டுகளில் சுங்க கட்டணத்தை செலுத்தி விட்டு செல்ல முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக தேசிய நெடுஞ்சாலை துறை அமைச்சகத்தின் இணையதளத்தில் கேஒய்சி செய்யும் ஆப்ஷனை நெடுஞ்சாலை துறை அமைச்சகம் அறிமுகப்படுத்தியுள்ளது.
அந்த ஆப்ஷன் உள்ளே சென்று ஃபாஸ்ட் டேக் கார்டு வைத்திருப்பவர்கள் தங்களது செல்போன் எண் மூலம் உள்ளே நுழைந்து அங்கு அவரது செல்போன் எண்ணிற்கு ஒதுக்கப்பட்டுள்ள ஃபாஸ்ட் டேக் கார்டை தேர்வு செய்து அதற்கு தேவையான ஆவணங்களை சமர்ப்பித்து கேஒய்சியை செய்து முடிக்கலாம். இப்படியாக ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டால் அந்த ஆவணங்கள் நேரடியாக சரி பார்ப்பிற்கு அனுப்பப்படும்.
இப்படியாக கேஒய்சி செய்யப்படாத கார்டுகள் எல்லாம் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு கேஒய்சி செய்த கார்டுகளாக மாற்றப்படும். இதற்கு பத்து முதல் 15 நாட்கள் வரை கால அவகாசம் ஆகும். சரியான ஆவணங்களோடு ஃபாஸ்ட் டேக் கார்டை கேஒய்சி செய்து விட்டால் அந்த கார்டை தொடர்ந்து பயன்படுத்த முடியும். கேஒய்சி செய்யப்படாத கார்டுகள் செயலிழக்கம் செய்யப்பட அதிகமான வாய்ப்புகள் உள்ளன.
இப்படியாக ஒரு ஃபாஸ்ட்டேக் கார்டை கேஒய்சி செய்ய அந்த வாகனத்தின் பதிவு சான்றிதழ் வாகன உரிமையாளரின் புகைப்படம் அவரது முகவரிக்கான ப்ரூஃப் மற்றும் அடையாள ப்ரூஃப் ஆகியவற்றை வழங்குவதன் மூலம் கேஒய்சி செய்யப்படும் இந்த ஆவணங்களை எல்லாம் சரிபார்த்து தான் மத்திய அரசு ஃபாஸ்ட்டேக் கார்டுக்கான கேஒய்சியை செய்கிறது.