ரஷ்ய அதிகாரிகளிற்கு எதிராக தடை விதித்த அமெரிக்கா
ரஷ்ய எதிர்கட்சி தலைவர் அலெக்சே நவால்னியின் மரணம் தொடர்பில் மூன்று ரஷ்ய அதிகாரிகளிற்கு எதிராக அமெரிக்கா தடைகளை விதித்துள்ளது.
நவால்னி உயிரிழந்த போலர் வூல்வ் எனப்படும் சிறையின் மேற்பார்வை அதிகாரி உட்பட மூவருக்கு எதிராக அமெரிக்கா இவ்வாறு தடைகளை விதித்துள்ளது.
பரந்துபட்ட தடை
இந்தநிலையில் நவால்னியின் மரணத்திற்கு பின்னர் அதிகாரிக்கு விளாடிமிர் புட்டினின் உத்தரவின் பேரில் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது என அமெரிக்க இராஜாங்க திணைக்களம் அறிவித்துள்ளது.
இதேவேளை உக்ரைனிற்கு எதிராக ரஷ்யா தாக்குதல்களை ஆரம்பித்து இரண்டு வருடங்கள் இன்றுடன் பூர்த்தியாகின்ற நிலையில் ரஷ்யாவிற்கு எதிராக பரந்துபட்ட தடைகளை அமெரிக்கா அறிவித்துள்ளது.