இந்து சமுத்திரத்தில் அமெரிக்காவின் செல்வாக்கு பாதிக்கப்படும்: ரணில் எச்சரிக்கை

இஸ்ரேல் – பாலஸ்தீன யுத்தத்தின அமெரிக்காவின் முடிவினால் இந்து சமுத்திரத்தில் அமெரிக்காவின் செல்வாக்கு பாதிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பிராந்தியத்தில் உள்ள இஸ்லாமிய நாடுகளின் எதிர்ப்பின் காரணமாக இந்து சமுத்திர பிராந்திய நாடுகள் அமெரிக்காவுடன் நெருக்கமான உறவினை ஏற்படுத்துவது பாதிக்கப்படலாம் என அவர் தெரிவித்துள்ளார்.

சீன – ரஷ்ய ஈரானிய மூலோபாயங்கள் அமெரிக்காவின் ஆதிக்கத்தினை மிகச்சரியான தாக்குகின்றன எனவும் அமெரிக்காவை மேலும் பலவீனமாக்குகின்றன எனவும் ரணில் கூறியுள்ளார்.

வளமிக்க செழிப்பான பொருளாதாரம்
“இந்துசமுத்திரத்தில் ஸ்திரதன்மை நிலவவேண்டும் என்றால் காசா யுத்தம் கூடிய விரைவில் முடிவிற்கு வரவேண்டும். அதன் பின்னர் ஐந்து வருடங்களிற்குள் சுதந்திர பாலஸ்தீனம் உருவாகவேண்டும். இஸ்ரேலின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படவேண்டும்.

உக்ரைன் யுத்தமும் அதன் பின்னரான மேற்குலகின் தடைகளும் வளமிக்க செழிப்பான பொருளாதாரம் மற்றும், சீனாவிலும் மேற்கு இந்து சமுத்திரத்திலும் புதிய சந்தைகளை கண்டறிய உதவியுள்ளது.

உதாரணமாக ரஷ்யாவின் கச்சா எண்ணெய் வளைகுடாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களில் சுத்திகரிக்கப்படுகின்றது.

துபாய் தற்போது உலகின் மிகப்பெரும் கோடீஸ்வரர்களின் நிதிசந்தையாக மாறியுள்ளது. லண்டனின் இடத்தை அது கைப்பற்றியுள்ளது.

ஈரானின் நிலைப்பாடு
மேலும், ரஷ்யா ஈரானுடன் நெருங்கிய உறவை ஏற்படுத்தியுள்ளது.ரஷ்யாவிற்கு ஆளில்லா விமானங்களை வழங்கும் முக்கிய நாடாக ஈரான் காணப்படுகின்றது.

இவ்வாறான சூழ்நிலையில், ரஷ்யா, தென்னாபிரிக்கா, மியன்மார் போன்ற இந்துசமுத்திர நாடுகளுடன் கடல்சார் ஒத்திகைகளில் ஈடுபட்டுள்ளது என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அத்தோடு, சவுதிஅரேபியாவிற்கும் ஈரானிற்கும் இடையில் பிளவினை உருவாக்குவதில் சீனா முக்கிய பங்களிப்பை செய்தது. ஈரானும் அதன் சகாக்களும் தற்போது மேற்காசியாவில் முக்கியமானவர்களாக மாறியுள்ளனர்.” என கூறியுள்ளார் ரணில் விக்ரமசிங்க .

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *