அமெரிக்க படைத்தள தாக்குதல்: பைடனின் சூளுரையால் அச்சத்தில் உலகநாடுகள்

அமெரிக்க தளம் மீது ஜோர்தானில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலிற்கான அமெரிக்காவின் பதிலடி உக்கிரமானதாகயிருக்கலாம் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஈராக் சிரியா மீது அமெரிக்கா முன்னர் மேற்கொண்ட தாக்குதலை விட இம்முறை இடம்பெறவுள்ள தாக்குதல் பாரதூரமான விளைவை தோற்றுவிக்கும் என கூறப்படுகிறது.

எனினும் பென்டகனும் வெள்ளை மாளிகையும் இதுவரை தங்கள் திட்டங்களை வெளிவிடவில்லை எனவும் இது பாரிய தாக்குதலுக்கான திட்டமிடல் எனவும் சர்வதேச இராணுவ ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

ஈரானிற்குள் தாக்குதல்
ஒக்டோபர் ஏழாம் திகதிக்கு பின்னர் ஈராக் சிரியாவில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது ஈரான் சார்பு குழுக்கள் 160 தடவைகளிற்கு மேல் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளன.

இந்நிலையில் மிகத்தெளிவான செய்தியை தெரிவிப்பதற்காக ஈரானிற்குள் தாக்குதலை மேற்கொள்ளவேண்டும் என குடியரசுக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் வேண்டுகோள் விடுத்துள்ளதாக அமெரிக்க தெரிவித்துள்ளது.

அத்தோடு ஒக்டோபர் ஏழாம் திகதிக்கு பின்னர் அதிகளவு அமெரிக்க படையினரை கொலை செய்த ஆளில்லா விமானதாக்குதலிற்கு எவ்வாறு பதிலளிப்பது என்பதே ஜோ பைடன் எதிர்நோக்கியுள்ள பெரும் சவால் எனவும் கூறப்படுகிறது.

இந்நிலையில் ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படையினர் வெளியேறும் வேளையில் அபேகேட்டில் இடம்பெற்ற தாக்குதலில் 13 அமெரிக்க படையினர் கொல்லப்பட்ட பின்னர் அதிக அமெரிக்கபடையினர் தற்போதைய தாக்குதலிலேயே கொல்லப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *