அமெரிக்காவின் நைட்ரஜன் வாயு விவகாரம்… சித்திரவதைக்கு ஒப்பானது: ஐ.நா மனித உரிமைகள் தலைவர் கண்டனம்

அமெரிக்க மாகாணம் ஒன்று கைதிக்கு நைட்ரஜன் வாயு செலுத்தி மரண தண்டனையை நிறைவேற்றியுள்ளது சித்திரவதைக்கு ஒப்பானது என ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் தலைவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சர்ச்சைக்குரிய சம்பவம்

அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தில் குறித்த சர்ச்சைக்குரிய சம்பவம் நடந்துள்ளது. 1988ல் வாடகை கொலையாளி என கைது செய்யப்பட்ட கென்னத் ஸ்மித் என்பவருக்கு கடந்த வியாழக்கிழமை நைட்ரஜன் வாயு செலுத்தி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.

அமெரிக்காவின் நைட்ரஜன் வாயு விவகாரம்… சித்திரவதைக்கு ஒப்பானது: ஐ.நா மனித உரிமைகள் தலைவர் கண்டனம் | Us Nitrogen Gas Execution Torture Rights Chief@getty

மரண தண்டனை நிறைவேற்ற விஷ ஊசி புழக்கத்திற்கு வந்த 40 ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக இதுபோன்ற ஒரு புதிய முறையில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த நிலையில், குறித்த சம்பவத்தை வெளிப்படையாக கண்டித்துள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் தலைவர் Volker Turk, இதுவரை சோதனை செய்யப்படாத ஒரு புதிய முறையை பயன்படுத்தி, நைட்ரஜன் வாயு மூலம் மூச்சுத்திணறலை உருவாக்கி மரண தண்டனை நிறைவேற்றியுள்ளது, உண்மையில் சித்திரவதைக்கு ஒப்பானதாகும் என்றார்.

அனைத்து மாகாணங்களையும்

மட்டுமின்றி, இது மிருகத்தனமானது, கொடூரமானது, இழிவானதும் கூட என்றார். மேலும், மரண தண்டனை என்பது வாழ்வதற்கான அடிப்படை உரிமைக்கு முரணானது எனறு குறிப்பிட்டுள்ள அவர்,

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *