காசாவில் துறைமுகமொன்றை நிர்மாணிக்கும் அமெரிக்கா: பைடன் உறுதி
இஸ்ரேல் பதற்ற நிலைக்கு மத்தியில் மனிதாபிமான உதவிப் பொருட்களை விநியோகிப்பற்காக காசா கடற்கரையோரத்தில் துறைமுகம் ஒன்றை அமெரிக்கா நிர்மாணிக்கும் என ஜனாதிபதி ஜோ பைடன் உறுதியளித்துள்ளார்.
அமெரிக்கவின் காங்கிரஸில் கட்சி நிகழ்த்திய வருடாந்த உரையின்போது ஜனாதிபதி ஜோ பைடன் இவ்வாறு கூறியுள்ளார்.
இந்நிலையில் குறித்த தற்காலிக துறைமுகமானது, பாலஸ்தீனர்களுக்கான மனிதாபிமான உதவிகளை அதிகரிக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இஸ்ரேல் அனுமதி
காசாவுக்கு மேலும் அதிகளவு விநியோங்களை இஸ்ரேல் அனுமதிக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி பைடன் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், காசாவிலுள்ள மக்களில் கால்வாசிப் பேர் பஞ்சத்தை எதிர்கொள்வதாக ஐ.நா எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.