5 நிமிடம் சார்ஜுக்கு 2 மணி நேரம் யூஸ்… ரெட்மி பட்ஸ் 5 அறிமுகம்..!
சியோமி நிறுவனம் அதன் லேட்டஸ்ட் தயாரிப்பாக Redmi Buds 5-ஐ அறிமுகப்படுத்தி இந்தியாவில் அதன் TWS இயர்பட்ஸ் போர்ட்ஃபோலியோவை விரிவுப்படுத்தி உள்ளது.
இந்த புதிய இயர்பட்ஸ் நுகர்வோர் ஆடியோ அனுபவத்தை சிறப்பாக வைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக சியோமி குறிப்பிட்டுள்ளது. சியோமி நிறுவனம் தனது இந்த புதிய தயாரிப்பை “SuperBuds” என குறிப்பிட்டு விளம்பரப்படுத்தி உள்ளது. இது ANC மற்றும் ஃபாஸ்ட்சார்ஜிங் சப்போர்ட்டை கொண்டுள்ளது.
புதிய Redmi Buds 5 ஆனது ஃப்யூஷன் பிளாக், ஃப்யூஷன் பர்பிள் மற்றும் ஃப்யூஷன் ஒயிட் உள்ளிட்ட 3 கலர் ஆப்ஷன்களில் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் பிப்ரவரி 20 ஆம் தேதி முதல் Mi.com, அமேசான், ஃபிளிப்கார்ட், Mi Homes மற்றும் Xiaomi ரீடெய்ல் பார்ட்னர்களிடமிருந்து ரூ.2,999 என்ற விலையில் வாங்க கிடைக்கும். அதே நேரம் இந்த புதிய இயர்பட்ஸ்களுக்கான லிமிட்டட் பீரியட் ஆஃபரையும் நிறுவனம் அறிவித்துள்ளது. Redmi Note 13 சீரிஸ் மொபைல் அல்லது Xiaomi மற்றும் Redmi Pad வாங்கினால் இந்த புதிய Redmi Buds 5 ரூ.2,499-க்கு கிடைக்கும்.
Redmi Buds 5 ஆனது 46dB ஹைப்ரிட் நாய்ஸ் கேன்சலேஷனை கொண்டுள்ளது, இது 99.5% பின்னணி இரைச்சலைத் தடுக்கும் என்று நிறுவனம் உறுதியளித்துள்ளது. அதே நேரம் இதிலிருக்கும் டூயல்-மைக் ஏஐ வாய்ஸ் enhancement ஆனது கால்ஸ், வாய்ஸ் கமெண்ட்ஸ் மற்றும் அன்றாட பயன்பாட்டிற்கான கிரிஸ்டல்-கிளியர் கம்யூனிகேஷனை உறுதி செய்கிறது. அதிநவீன அம்சங்கள் மற்றும் ஸ்டைலான டிஸைனுடன் கூடிய நிரம்பியிருக்கும் இந்த இயர்பட்ஸ் யூஸர்களுக்கு மிகச்சிறந்த ஆடியோ எக்ஸ்பீரியன்ஸை கொடுக்கும் என கூறுகிறது நிறுவனம்.
இந்த இயர்பட்ஸில் 12.4மிமீ டைனமிக் டைட்டானியம் டிரைவர்ஸ் உள்ளன, இவை எல்லா ஃப்ரீக்வென்ஸிகளிலும் சிறந்த தரமான ஒலியை வழங்குகின்றன. இதன் மூலம் யூஸர்களுக்கு சீரான மற்றும் துல்லியமான ஆடியோ அனுபவம் கிடைக்கும். மேலும் இந்த இயர்பட்ஸ்களில் நன்கு காற்று வீசும் நிலையிலும் கூட யூஸர்களுக்கு அடான்ஸ்ட் கால் குவாலிட்டியை வழங்க சியோமியின் டூயல்-சேனல் AI அல்காரிதம் பயன்படுத்தப்படுகிறது.
இந்த TWS இயர்பட்ஸ் யூஸர்களுக்கு 3 ட்ரான்ஸ்பரன்ஸி மோட்ஸ்களை வழங்குகிறது மற்றும் யூஸர்கள் Redmi Buds 5 உடன் ஸ்டாண்டர்ட் , என்ஹான்ஸ்ட் ட்ரெபிள், என்ஹான்ஸ்ட் பாஸ் மற்றும் என்ஹான்ஸ்ட் வாய்ஸ் உள்ளிட்ட பல்வேறு ஆடியோ எஃபெக்ட்ஸ்களை தேர்வு செய்யலாம். ஏற்கனவே குறிப்பிட்டபடி இது ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சத்துடன் வருகிறது. 5 நிமிட சார்ஜிங் மூலம் 2 மணிநேரம் வரையிலும், 10 நிமிடங்களில் 4 மணிநேரம் ப்ளே டைமிங்கை வழங்கும் என கூறப்படுகிறது.
சார்ஜிங் கேஸுடன் சேர்த்து மொத்தமாக ஒருமுறை சார்ஜ் செய்தால் இந்த இயர்பட்ஸ் 38 மணிநேர பேட்டரி லைஃபை வழங்குவதாக கூறப்படுகிறது. தவிர ப்ளேபேக் மற்றும் நாய்ஸ் கேன்சலேஷன் செய்வதை விரைவாக கன்ட்ரோல் செய்ய அனுமதிக்கும் டச் கன்ட்ரோல்ஸ்களை உள்ளடக்கியது. மேலும் இவை தூசி மற்றும் நீர் எதிர்ப்பிற்கான IP54 ரேட்டிங்கை கொண்டுள்ளது.
இதன் சார்ஜிங் கேஸில் 480mAh பேட்டரியை பேக் உள்ளது. மறுபுறம் இயர்பட்ஸ்கள், 54mAh பேட்டரியைக் கொண்டுள்ளன. சார்ஜிங் கேஸுடன் கூடிய இயர்பட்ஸ்களின் எடை சுமார் 42.47 கிராம். இதனிடையே Xiaomi Earbuds ஆனது யூஸர்கர்ளிடையே பர்சனலைசேஷன் மற்றும் ஃப்லெக்சிபிலிட்டி தேவையை நிவர்த்தி செய்கிறது. யூஸர்கள் இந்த App-ல் ANC-ஐ Deep noise cancellation, Balanced noise cancellation மற்றும் Light noise cancellation என 3 மோட்ஸ்களில் நிர்வகிக்கலாம்.