பையனுடன் ஃபுட் பால் விளையாடவா இந்த காரை பயன்படுத்தினாரு! காவி நிற உடையில் மஞ்சள் நிற காரில் வந்த பிரபலம்!
உலகின் மிக மிக விலை உயர்ந்த கார் மாடல்களில் லம்போர்கினி உருஸ்-ம் ஒன்றாகும். இது ஓர் எஸ்யூவி ரக கார் மாடல் ஆகும். அதிக சொகுசு வசதிகளையும், அதிக திறனை வெளியேற்றக் கூடிய ஓர் தரமான எஸ்யூவி கார் மாடலே இது காட்சியளிக்கின்றது.
இதனால்தான் உலக அளவில் செல்வந்தர்களின் பிரியமான கார் மாடலாக உருஸ் எஸ்யூவி காட்சியளிக்கின்றது. இத்தகைய ஓர் காரையே இந்தியாவைச் சேர்ந்த ஓர் முன்னணி பிரபலம் தன்னுடைய மகனை கால்பந்தாட்ட பயிற்சிக்கு அழைத்து செல்வதற்காக மைதானத்திற்கு ஓட்டி வந்திருக்கின்றார். அந்த பிரபலம் வேறு யாரும் அல்ல, அவர்தான் இந்திய தொழிலதிபர்களில் ஒருவரான ராஜ் குந்தர் ஆவார்.
இவர் இந்தியாவின் முக்கிய தொழிலதிபர்களில் ஒருவர் மட்டுமில்லைங்க, பாலிவுட் திரை உலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ஷில்பா ஷெட்டியின் கணவரும் ஆவார். இவரே தன்னுடைய மகனின் கால்பந்தாட்ட பயிற்சிக்காக லம்போர்கினி உருஸ் எஸ்யூவி-யை ஓட்டி வந்திருக்கின்றார். இந்தியாவில் மிக அதிக எண்ணிக்கையில் சொகுசு கார்களை பயன்படுத்தி வரும் நபர்களில் ராஜ் குந்த்ரா மற்றும் ஷில்பா ஷெட்டி தம்பதியினரும் அடங்குவார்கள்.
இவர்களிடத்தில் ஏகப்பட்ட சொகுசு கார்கள் பயன்பாட்டில் இருக்கின்றன. அந்தவகையில், மிக மிக அதிக விலைமிக்க கார் மாடலாக லம்போர்கினி உருஸ் இருக்கின்றது. இதன் விலை ரூ. 4.18 கோடிக்கும் அதிகம் ஆகும். இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். இதன் விலையை போலவே காரில் இடம் பெற்றிருக்கும் லக்சூரி அம்சங்களும் மிக மிக அதிகமாக உள்ளது.
அந்தவகையில், மிக சிறந்த மற்றும் கம்ஃபோர்ட்டான ரைடு அனுபவத்தை வழங்கும் விதமாக இந்த காரில் ஏர் சஸ்பென்ஷன் செட்-அப் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இதுபோன்று இன்னும் பல சிறப்பம்சங்களை உருஸ் தாங்கி இருக்கின்றது. இதனால் இந்திய திரை உலகினர் மத்தியிலும் உருஸ்-க்கு மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.
இந்தியாவில் ரஜினியின் மகள், ஏஆர் ரஹ்மான், ஜூனியர் என்டிஆர், சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட பிரபலங்கள் பலர் பயன்படுத்தி வருகின்றனர். மிக முக்கியமாக பாலிவுட் திரை உலகினரின் ஃபேவரிட் கார் மாடலாக உருஸ் காட்சியளிக்கின்றது. அம்பானி குடும்பத்தினரிடத்திலும் இந்த கார் மாடல் பயன்பாட்டில் இருக்கின்றது.
இந்த காரில் 4.0 லிட்டர் ட்வின் டர்போ வி8 எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டு உள்ளது. இது 650 பிஎச்பி பவர் மற்றும் 850 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது. அதுமட்டுமில்லைங்க, இதனால் வெறும் 3.6 செகண்டுகளிலேயே பூஜ்ஜியத்தில் இருந்து மணிக்கு 100 கிமீ வேகத் திறனை எட்ட முடியுமாம்.
அதேவேளையில், இதனால் உச்சபட்சமாக மணிக்கு 305 கிமீ வேகத்தில் பயணிக்க முடியும். இத்தகைய சூப்பர் ஃபாஸ்ட் வேகத்தில் இந்த கார் செல்லும் என்பதனாலேயே உலகின் மிக சிறந்த மற்றும் அதிக வேகத்தில் பயணிக்கும் எஸ்யூவி ரக காராக லம்போர்கினி உருஸ் இருக்கின்றது.
இதனாலேயே இந்தியாவிலும் காருக்கு மிகப் பெரிய ஃபேன் பட்டாளம் தென்படுகின்றது. அந்தவகையில், ஷில்பா ஷெட்டி – ராஜ் குந்தர் தம்பதியினரிம் இந்த காரின் ஃபேனாகக் காட்சியளிக்கின்றனர். இந்த கார் மாடல் மட்டுமல்ல அவர்களிடத்தில் இன்னும் பல ஆடம்பர கார்கள் பயன்பாட்டில் உள்ளன.
அந்தவகையில், குரோம் பூச்சு செய்யப்பட்ட பென்ட்லீ ஃப்ளையிங் ஸ்பர், மெர்சிடிஸ் பென்ஸ் ஜிஎல்எஸ் 600 எஸ்யூவி, ரேஞ்ஜ் ரோவர் ஆட்டோ பயோகிராஃபி, பிஎம்டபிள்யூ ஐ8 சூப்பர் மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் ஜி63 ஏஎம்ஜி ஆகிய கார் மாடல்களை அவர் பயன்படுத்தி வருகின்றார். இதுபோன்று இன்னும் பல கார்களை அவர் பயன்படுத்தி வருகின்றார் என்பது குறிப்பிடத்தகுந்தது.