உத்தர பிரதேசம் முதல் இடம்.. தமிழ்நாடு 14வது இடம்..!!

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த 2024-25 ஆம் நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட் அறிக்கையில் ரயில்வே துறையில் முக்கியமான அறிவிப்புகள் வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஏமாற்றமாக இருந்தது.

இந்த நிலையில் 2024-25 ஆம் நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டில் மத்திய அரசு சுமார் 2.55 லட்சம் கோடி ரூபாய் நிதியை ரயில்வே துறைக்காக ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த நிலையில் ரயில்வே துறையில் மாநில அளவில் எந்த மாநிலத்திற்கு எவ்வளவு கிடைத்துள்ளது.

உத்தரபிரதேசம் – 19,575 கோடி ரூபாய்

மகாராஷ்டிரா – 15,554 கோடி ரூபாய்

மத்திய பிரதேசம் – 15,143 கோடி ரூபாய்

மேற்கு வங்கம் – 13,810 கோடி ரூபாய்

ஒடிசா – 10,536 கோடி ரூபாய்

வடகிழக்கு இந்தியா – 10,369 கோடி ரூபாய்

பீகார் – 10,032 கோடி ரூபாய்

ராஜஸ்தான் – 9,782 கோடி ரூபாய்

ஆந்திரப் பிரதேசம் – 9,138 கோடி ரூபாய்

குஜராத் – 8,587 கோடி ரூபாய்

கர்நாடகா – 7,524 கோடி ரூபாய்

ஜார்கண்ட் – 7,234 கோடி ரூபாய்

சத்தீஸ்கர் – 6,896 கோடி ரூபாய்

தமிழ்நாடு – 6,331 கோடி ரூபாய்

உத்தரகாண்ட் – 5,120 கோடி ரூபாய்

தெலுங்கானா – 5,071 கோடி ரூபாய்

பஞ்சாப் – 4,933 கோடி ரூபாய்

ஜம்மு காஷ்மீர் – 3,677 கோடி ரூபாய்

ஹரியானா – 2,861 கோடி ரூபாய்

கேரளா – 2,744 கோடி ரூபாய்

இமாச்சல பிரதேசம் – 2,681 கோடி ரூபாய்

டெல்லி – 2,577 கோடி ரூபாய்

ரயில்வே துறையில் அதிக நிதி ஒதுக்கீடு பெற்ற மாநிலங்களில் உத்தர பிரதேசம் 19,575 கோடி ரூபாய் உடன் முதல் இடத்தில் இருக்கிறது. தமிழ்நாடு 6,331 கோடி ரூபாய் ஒதுக்கீடு பெற்றுள்ளது.

இந்த இடைக்கால பட்ஜெட்டில் மெட்ரோ ரயில் திட்டங்கள், நமோ பாரத் ரயில் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிப்பதோடு தொடர்ந்து பல நகரங்களுக்கு இவை விரிவுபடுத்தப்படும் என மத்திய நிதியமைச்சர் தெரிவித்தார்.

மேலும் புதிய சாலை, ரயில்வே மற்றும் துறைமுகங்களுக்கான வழித்தடங்கள் ஏற்படுத்தப்படும். இந்தியாவில் உள்ள பெரிய நகரங்களில் மெட்ரோ ரயில் சேவையை விரிவுபடுத்துவதற்கு முன்னுரிமை தரப்படும்.

40000 ரயில்களின் பெட்டிகளின் வந்தே பாரத் ரயில் பெட்டிகளாக மாற்றப்படும். தொழிற்சாலைகள் மற்றும் துறைமுகங்களை இணைக்கும் விதமாக 3 முக்கிய ரயில்வே பெரு வழிதடங்கள் அமைக்கப்படும்.

இந்தியாவில் தமிழ்நாடு ஐந்தாவது பெரிய மாநிலமாகவும், பொருளாதார பங்களிப்பில் இரண்டாவது பெரிய மாநிலமாகவும் உள்ளது. ஆனால் ரயில்வே பட்ஜெட் ஒதுக்கீட்டில் 14வது இடத்தில் உள்ளது மற்றும் சென்னை மெட்ரோ ரயில் கட்டம்2 நிதி ஒதுக்கீடு இன்னும் நிலுவையில் உள்ளது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *