VaadiVaasal: வாடிவாசல் ட்ராப் ஆக வாய்ப்பே இல்ல… வெற்றிமாறன், சூர்யா போட்ட புது பிளான்!
சென்னை: வெற்றிமாறன் – சூர்யா கூட்டணி இணைந்துள்ள வாடிவாசல் ஷூட்டிங் இன்னும் தொடங்கவே இல்லை. வெற்றிமாறன் விடுதலை 2 படப்பிடிப்பில் பிஸியாக இருப்பதால் அது முடிந்த பின்னரே வாடிவாசல் பக்கம் வருவார் என சொல்லப்படுகிறது.
இதனிடையே இந்தப் படம் ட்ராப் ஆகும் என வெளியான தகவல் உண்மையில்லை என தற்போது தெரியவந்துள்ளது.
வெற்றிமாறன், சூர்யா போட்ட புது பிளான்
மாஸ் ஹீரோக்களில் தனுஷுடன் மட்டுமே தொடர்ந்து கூட்டணி வைத்து வந்த வெற்றிமாறன், முதன்முறையாக சூர்யாவுடன் இணைய முடிவு செய்தார். அதன்படி வெற்றிமாறன், சூர்யா கூட்டணியில் வாடிவாசல் படம் குறித்த அறிவிப்பு வெளியானது. இந்தப் படம் கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் என தகவல்கள் வெளியாகின.
மேலும், கடந்தாண்டு இறுதியிலேயே வாடிவாசல் படப்பிடிப்பை தொடங்க முடிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால், விடுதலை 2ம் பாகத்தில் சில மாற்றங்கள் செய்ய வேண்டியது இருந்ததால் அதன் படப்பிடிப்பு இன்னும் முடிவுக்கு வரவில்லை. எனவே விடுதலை 2ம் பாகத்தின் ஷூட்டிங் முடிந்ததும் தான் வாடிவாசல் தொடங்கும் என கூறப்பட்டது. இதனிடையே பருத்திவீரன் இயக்குநர் அமீரும் வாடிவாசலில் இணைந்தார்.
அதேநேரம் ஸ்டூடியோ க்ரீன் ஞான்வேல் ராஜாவுக்கும் இயக்குநர் அமீருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினை விஸ்வரூபம் எடுத்தது. இந்த விவகாரத்தில் அமைதி காத்த சூர்யா, வாடிவாசலில் அமீர் நடித்தால் அவர் விலகிவிடும் முடிவில் இருப்பதாக சொல்லப்பட்டது. மேலும் சூர்யா விலகினால் அவருக்குப் பதிலாக தனுஷ் அல்லது சூரி நடிக்கலாம் எனவும் தகவல்கள் வெளியாகின.