வாடிவாசல் – ஜி.வி.பிரகாஷ் கொடுத்த அப்டேட்!
நடிகர் சூர்யா இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் ஜல்லிக்கட்டை மையமாக வைத்து உருவாகும் ‘வாடிவாசல்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் விரைவில் ஆரம்பமாகவுள்ளன.
சில மாதங்களுக்கு முன், இப்படத்தின் முன்னோட்ட காட்சிகளை படக்குழுவினர் வெளியிட்டிருந்தனர்.
கங்குவா படப்பிடிப்பு முடிந்ததும் நடிகர் சூர்யா வாடிவாசல் படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சில காரணங்களால் படப்பிடிப்பு துவங்க தாமதமாகி வருகிறது.
விஜய் ஆண்டனியின் ஹிட்லர் படத்தின் டீசர் எப்போது?
கங்குவாக்குப் பின் சுதா கொங்காரா படத்தில் சூர்யா நடிக்க உள்ளார். சமீபத்தில், நேர்காணலில் கலந்துகொண்ட இயக்குநர் வெற்றிமாறன், “விடுதலை இரண்டாம் பாகத்திற்கான இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இது முடிந்ததுமே மிக விரைவில் வாடிவாசல் படப்பிடிப்பு பணிகளில் கவனம் செலுத்த உள்ளேன்” எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இப்படத்தின் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார், ” வாடிவாசல் படத்திற்கான இசை தயார் நிலையில் உள்ளது.இயக்குநர் வெற்றிமாறனின் தற்போதைய படப்பணிகள் முடிந்ததும் வாடிவாசல் ஆரம்பமாகும். உங்களைப்போல் நானும் ஆர்வத்தில்தான் இருக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.
வாடிவாசலுக்கான பின்னணி இசை, பாடலுக்கான இசை எல்லாம் தயாராக உள்ளதால் சூர்யா ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.