#VALENTINE SPL : இவர்களில் யார் பெஸ்ட்… லவ்வர்ஸ் OR சிங்கிள்ஸ்..? சின்னதா ஒரு கம்பேரிசன்…

முந்தைய நாள் சண்டையிட்டிருந்தாலும், காதலர் தினத்தன்று காதலர்கள் றெக்கை முளைத்து வானில் பறப்பதை போன்று தான் இருப்பார்கள். காதலர்களின் அட்டகாசத்தை கண்டு கண்டு சிங்கிள்ஸ் பொறாமைப்பட்டு தான் போவார்கள். அந்த அளவுக்கு காதலர்கள் கொண்டாட்டம் இருக்கும் இந்நாளில். ஆனால், சோகமே உருவானது போல் சிங்கிள்ஸ் திரிவார்கள்…

சரி.. இவர்களில் யார் பெஸ்ட்… லவ்வர்ஸ் OR சிங்கிள்ஸ்..? சின்னதா ஒரு கம்பேரிசன்…

► காதலி எங்கெல்லாம் செல்ல வேண்டுமோ, அவளை பிக் அப், ட்ராப் செய்வது தான் காதலனின் முதல் வேலை/சேவை (சிலர் விரும்பி பண்ணுவதும் உண்டு) …காதலியிடம் இருந்து அழைப்பு வந்துவிட்டாலே அனைத்து வேலைகளையும் விட்டுவிட்டு காதலன் சென்று விட வேண்டும்.. அதுவும் குறிப்பிட்ட நேரத்திற்கு… காதலி எவ்வளவு நேரம் கடையில் பர்சேஸ் செய்கிறாரோ அதுவரை உடன் இருக்க வேண்டும்.

► ஆனால் சிங்கிளா இருந்தா தினமும் தங்களது அன்றாட வேலைகளை சரியாக செய்ய முடியும். வழக்கமாக வார இறுதி நாட்களில் ஆண்கள் கிரிக்கெட், புட் பால் உள்ளிட்ட விளையாட்டுகளில் மெய்மறந்து விளையாடுவதுண்டு. சிங்கிளாக இருப்பவர்கள் தான் தொடர்ந்து சரியாக விளையாடுவதற்கு வருவதாக ஒரு சேதி…

► முதலில் போன் சாட்டில் ஆரம்பிக்கும் காதல், பல மணி நேரம் பேசும் அளவிற்கு செல்லும். பேசுவதற்கு ஒன்றுமே இருக்காது. ஆனால் தினமும், அதுவும் மணிக்கணக்கில் பேச வேண்டும்… தூக்கம் வந்தால் கூட மறுமுனையில் இருக்கும் நபருக்கு தூக்கம் வரும் வரை போனை டிஸ்கனெக்ட் செய்யக்கூடாது. ‘ஹூம்..ஹூம்..’ என்று உச்சுக்கொட்டிக்கொண்டேவாவது பேச வேண்டும்..ஆனால், சிங்கிள்ஸ் போர் அடித்தாலோ, தூக்கம் வந்தாலோ போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டு கூட சுதந்திரமாக தூங்கலாம்…

► அதேபோன்று காதலன்/காதலி போனை அட்டென்ட் செய்யாமல் இருந்தாலோ, துண்டித்தாலோ அவ்வளவு தான்.. அதிலும், ‘வேறு ஒருவருடன் தொடர்பில் உள்ளார் (போனில்) என்று வந்தால், காதலரை நம்ப வைப்பதற்குள் போன உயிர் திரும்பி வந்த மாதிரி தான் பலருக்கு… ஆனால் சிங்கிள்ஸ்-க்கு மொபைல் போனில் அழைப்புகள் வருவதே அத்தி பூத்தாற் போல தான்..

► காதலர்கள் வாரத்திற்கு ஒருமுறையாவது அவுட்டிங் செல்ல வேண்டும். அதற்கு காதலரின் பர்ஸ் தான் மெஜாரிட்டியாக காலியாகும்(கண்டிஷன்ஸ் அப்ளை*).. ஆனால் சிங்கிள்ஸ் தங்களது பணத்தை தங்களுக்கும், தங்களுக்கு வேண்டிய நண்பர்களுக்கும் செலவு செய்யலாம். விரும்பும் போது நண்பர்களுடன் திட்டமிட்டு ஒரு வாரம் முழுக்க டூர் போகலாம்.

► நண்பர்களுடன் வெளியில் சென்றால் தனது காதலன்/ காதலியிடம் அனுமதி வாங்கி விட்டு தான் செல்ல வேண்டும். அப்படி அனுமதி வாங்காமல் சென்றால் வெளியில் சென்றவர் அன்றைக்கு தூங்கின மாதிரி தான்…பட் சிங்கிள்ஸ் எங்கு செல்ல வேண்டும் என்றாலும் யாரிடமும் அனுமதி வாங்க வேண்டிய தேவையில்லை.. கால் போன போக்கில் செல்லலாம். நீங்கள் செய்த செயலுக்கும் யாருக்கும் விளக்கமளிக்க தேவையில்லை..

► தங்களது லவ் மேட்டரை வீட்டில் எப்படி பேசுவது என்று ஆயிரம் முறை காதல் ஜோடிகள் விவாதிக்க வேண்டும்… ஆனால் சிங்கிள்ஸ்..உங்களுக்கு அந்த கவலையே இல்லை.

► பிறந்தநாள் வந்தால் காதலன்/காதலிக்கு பிடித்தமானதை செய்து சர்ப்ரைஸ் செய்ய வேண்டும். அன்றைய நாள் முழுவதும் அவருடன் செலவிட வேண்டும். சிங்கிள்ஸ்-க்கு பிறந்தநாள் கொண்டாட வேண்டிய அவசியமில்லை.. சொல்லாமலே நண்பர்கள் ‘சிறப்பாக’ செய்துவிடுவர்.

► காதலர் தினத்தன்று காதலர்கள் சுற்றுவது போல் சிங்கிள்ஸ் நீங்களும் உங்களது நண்பர்களுடன் ஜாலியாக பிடித்த இடத்திற்கு செல்லலாம்..

இவ்வாறு பல விஷயங்களை விவாதித்தாலும் காதலர்களுக்கு ‘காதல் தான் வாழ்க்கையை அழகாக்கும்’ என்ற நம்பிக்கை… ‘Love Makes Life Beautiful’ ..அதேமாதிரி சிங்கிள்ஸ்-க்கு ஒரே வரியில் சொல்ல வேண்டும் என்றால் ‘எதிர்பார்ப்புகளும் இல்லை, ஏமாற்றமும் இல்லை’ (No Commitments, No Disappointments)

காதல் வாழ்க்கையை அழகாக்கும் என்பது உண்மை தான். ஆனால் அது ‘உண்மை’ காதலாக இருக்க வேண்டும்… பள்ளிப்பருவ காதல் திருமணத்தில் முடிந்த கதை எத்தனையோ உண்டு.. எனவே காதலர்கள் தங்களது காதலை வாழ்வின் எல்லை வரை கொண்டு சென்றால் சிறப்பு..

அதேபோன்று சிங்கிள்ஸ் நீங்களும் கண்டிப்பாக வாழ்க்கையில் திருமணத்தை பார்க்கத்தான் போகிறீர்கள். எனவே உங்களது துணைவியை காதலுக்கும் ஒருபடி மேலாக நேசியுங்கள். காதலின் ஆழத்தை உணருங்கள்…

அந்த வகையில் லவ்வர்ஸ், சிங்கிள்ஸ் இரண்டுமே பெஸ்ட் தான்…

காதல் வரும் வரை காத்திருப்போம்….

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *