Vantara: அனந்த் அம்பானி அப்படி என்னதான் செய்கிறார்.. ஊரே இதை பத்திதான் பேச்சு..!
கோடிகோடியாகப் பணம் கொட்டிக் கிடந்தாலும் அதை தானம் தர்மம் செய்வதற்கு ஒரு பரந்த மனப்பான்மை வேண்டும். இயலாத காரணத்தால் புகலிடம் தேடிவருபவர்களை அரவணைத்து ஆதரித்து அவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்வதற்கு அறச்சிந்தனை வேண்டும். அப்படியொரு அறச்சிந்தனை இந்தியாவின் மாபெரும் பணக்காரரான முகேஷ் அம்பானியின் மகன் அனந்த் அம்பானிக்கு அமைந்திருப்பதை நாம் மனதாரப் பாராட்டியே ஆக வேண்டும்.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் ரிலையன்ஸ் பவுண்டேஷன் இணைந்து வந்தாரா (Vantara) எனும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளன. இந்தத் திட்டத்தின்கீழ் துன்புறுத்தப்பட்ட, காயமடைந்த, ஆதரவற்ற விலங்குகளை இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து கொண்டு வந்து அவற்றுக்குத் தேவையான பராமரிப்பையும் சிகிச்சையையும் வழங்குவதே இந்த வந்தாரா திட்டத்தின் நோக்கமாகும்.
குஜராத்தில் உள்ள ரிலையன்ஸின் ஜாம்நகர் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு வளாகத்தின் கிரீன் பெல்ட்டில் 3,000 ஏக்கர் பரப்பளவில் பரந்து விரிந்து கிடக்கும் பகுதியில் வந்தாரா திட்டம் செயல்படுத்துகிறது. உலகளவில் பாதுகாப்பு முயற்சிகளில் முன்னணி பங்களிப்பாளர்களில் ஒன்றாக இருக்க வேண்டும் என்பதே வந்தாராவின் நோக்கம். விலங்கு பராமரிப்பு மற்றும் நலனில் முன்னணி நிபுணர்கள் இதில் இணைந்து பணியாற்றுகின்றனர்.
3000 ஏக்கர் பரப்பளவில் விரிந்துள்ள இந்த சுத்திகரிப்பு வளாகம் கிட்டத்தட்ட ஒரு காடாகவே காட்சியளிக்கிறது. இது மீட்கப்பட்ட விலங்குகள் செழித்து வளர இயற்கையான, பசுமையான வாழ்விடத்தை தந்துள்ளது.
வந்தாரா திட்டம், இந்தியாவிலேயே முதன்முதலாக, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் ரிலையன்ஸ் அறக்கட்டளையின் இயக்குநர் அனந்த் அம்பானியின் அர்ப்பணிப்போடான தலைமையின் கீழ் உருவாக்கப்பட்டது.
ஜாம்நகரில் ரிலையன்ஸின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வணிகத்தையும் அனந்த் அம்பானி வழிநடத்துகிறார். அந்தத் திறனில், 2035 ஆம் ஆண்டுக்குள் நிகர கார்பன் ஜீரோ நிறுவனமாக மாறுவதற்கான ரிலையன்ஸின் பயணத்தை வழிநடத்தும் பொறுப்பை அவர் ஏற்றுள்ளார்.
வந்தாரா, அதிநவீன சுகாதாரம், மருத்துவமனைகள், ஆராய்ச்சி மற்றும் கல்வி மையங்கள் உள்ளிட்ட சிறந்த-இன்-கிளாஸ் விலங்கு பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு நடைமுறைகளை உருவாக்குவதில் கவனம் செலுத்துகிறது.
அதன் திட்டங்களுக்குள், புகழ்பெற்ற சர்வதேச பல்கலைக்கழகங்கள் மற்றும் இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியம் (IUCN) மற்றும் இயற்கைக்கான உலக வனவிலங்கு நிதியம் (WWF) போன்ற நிறுவனங்களுடன் மேம்பட்ட ஆராய்ச்சி மற்றும் ஒத்துழைப்பை ஒருங்கிணைப்பதிலும் வந்தாரா கவனம் செலுத்துகிறது.
கடந்த சில ஆண்டுகளில், இந்த திட்டத்தின் வாயிலாக 200 க்கும் மேற்பட்ட யானைகள், ஆயிரக்கணக்கான பிற விலங்குகள், ஊர்வன மற்றும் பறவைகளை பாதுகாப்பற்ற சூழ்நிலைகளில் இருந்து மீட்டுள்ளது. காண்டாமிருகம், சிறுத்தை, முதலை மறுவாழ்வு உள்ளிட்ட முக்கிய இனங்களை பாதுகாக்கும் வகையில் செயல்படுகிறது.
சமீபத்தில், வந்தாரா மெக்ஸிகோ, வெனிசுலா போன்ற நாடுகளில் இருந்து பாதிக்கப்பட்ட விலங்குகளை மீட்புப் பணிகளில் ஈடுபட்டது. மத்திய அமெரிக்க மிருகக்காட்சிசாலை அதிகாரிகளின் வேண்டுகோளை ஏற்று பல பெரிய விலங்குகளை மீட்டு வந்தது.
இத்தகைய மீட்பு மற்றும் மறுவாழ்வு பணிகள் அனைத்தும் இந்தியாவிலும் சர்வதேச அளவிலும் கடுமையான சட்டம் மற்றும் ஒழுங்குமுறை கட்டமைப்பின் கீழ் கண்காணிக்கப்படுகின்றன.
திட்டத்தின் அறிமுக விழாவில் பேசிய அனந்த் அம்பானி, “சிறு வயதில் எனக்கு இருந்த ஆர்வமாகத்தில் தொடங்கிய ஒரு விஷயம், இப்போது வந்தாரா மூலம் செயல்படுத்தப்படுகிறது.
புத்திசாலித்தனமான, அர்ப்பணிப்புள்ள குழுவுடன் ஒரு நற்பணியாக இது மாறியுள்ளது. இந்தியாவை பூர்வீகமாகக் கொண்ட ஆபத்தான உயிரினங்களைப் பாதுகாப்பதில் நாங்கள் கவனம் செலுத்துகிறோம். முக்கிய வாழ்விடங்களை மீட்டெடுக்கவும், உயிரினங்களுக்கு ஏற்படும் அவசர அச்சுறுத்தல்களை நிவர்த்தி செய்யவும் வந்தாராவை ஒரு முன்னணி பாதுகாப்பு திட்டமாக நிறுவவும் விரும்புகிறோம்.
எங்களின் முயற்சிகள் இந்தியாவிலும் சர்வதேச அளவிலும் அங்கீகரிக்கப்பட்டதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். இந்தியா மற்றும் உலகின் தலைசிறந்த விலங்கியல் மருத்துவ நிபுணர்கள் சிலர் எங்கள் பணியில் சேர்ந்துள்ளனர். அத்துடன் அரசு அமைப்புகள், ஆராய்ச்சி, கல்வி நிறுவனங்களின் தீவிர ஒத்துழைப்பும் எங்களுக்கான வழிகாட்டுதலைப் பெறுவதற்கு உதவுகின்றன.
பயிற்சி, திறன் மேம்பாடு மற்றும் விலங்கு பராமரிப்பு உள்கட்டமைப்பு ஆகியவற்றின் அடிப்படையில் இந்தியாவில் உள்ள 150-க்கும் மேற்பட்ட உயிரியல் பூங்காக்களை மேம்படுத்துவதில் இந்திய மிருகக்காட்சிசாலை ஆணையம் மற்றும் பிற தொடர்புடைய அரசு நிறுவனங்களுடன் கூட்டுசேர்வதை வந்தாரா நோக்கமாகக் கொண்டுள்ளது.
வந்தாரா உலகளாவிய நம்பிக்கையின் கலங்கரை விளக்கமாக மாறும். உலகளாவிய பல்லுயிர் பாதுகாப்பு முன்முயற்சிகளுக்கு முன்னோக்கிச் சிந்திக்கும் நிறுவனம் எவ்வாறு உதவ முடியும் என்பதை செயலில் காட்ட முடியும் என்றும் நாங்கள் நம்புகிறோம்.
வந்தாராவை நிறுவத் தூண்டிய காரணத்தை அனந்த் அம்பானி கூறுகையில், “வந்தாரா என்பது நவீன அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிபுணத்துவத்தின் சிறப்போடு இரக்கத்தின் பழமையான நெறிமுறை மதிப்பின் கலவையாகும். ஜீவ சேவா என்பது மனித குலத்துக்கும் ஒரு சேவையாக நான் பார்க்கிறேன்.
வந்தாராவில் யானைகளுக்கான மையம், சிங்கம், புலிகள், முதலைகள், சிறுத்தைகள் போன்ற பல பெரிய உயிரினங்களுக்கான பராமரிப்பு வசதிகள் உள்ளன என்றார். வந்தாராவில் உள்ள யானைகளுக்கான அதிநவீன தங்குமிடங்கள், அறிவியல் பூர்வமாக வடிவமைக்கப்பட்ட பகல் மற்றும் இரவு தங்குமிடங்கள், நீர் சிகிச்சை குளங்கள், யானைகளின் மூட்டுவலிக்கு சிகிச்சை அளிப்பதற்கான பெரிய யானை ஜக்குஸி ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
கால்நடை மருத்துவர்கள், உயிரியலாளர்கள், நோயியல் வல்லுநர்கள், ஊட்டச்சத்து நிபுணர்கள் மற்றும் இயற்கை ஆர்வலர்கள் உட்பட 500 க்கும் மேற்பட்ட நபர்களைக் கொண்ட சிறப்பு மற்றும் பயிற்சி பெற்ற பணியாளர்களால் 200 க்கும் மேற்பட்ட யானைகள் இங்கு பராமரிக்கப்படுகின்றன.
இந்த மையத்தில் 25,000 சதுர அடியில் உலகிலேயே மிகப் பெரிய யானைகள் மருத்துவமனை உள்ளது. இங்கு வெளியில் எடுத்துச் சென்று விலங்குகளை பரிசோதிக்கும் எக்ஸ்ரே இயந்திரங்கள், பல்வேறு சிகிச்சைகளுக்கான லேசர் இயந்திரங்கள், மருந்தகம், அனைத்து நோயறிதல் சோதனை வசதிகள் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
இங்கு யானைகளுக்கு ஆயுர்வேத சிகிச்சைகளும் தரப்படுகின்றன. முல்தானி மட்டி, சூடான எண்ணெய் மசாஜ்கள் அளிக்கப்படுகின்றன. 24 மணிநேரமும் யானைகளைப் பாராமரிப்பதற்காக ஆயுர்வேத சிகிச்சை நிபுணர்கள் உளளனர்.
பிற வன விலங்குகளுக்காக மறுவாழ்வு மையம் ஒன்று 600 ஏக்கர் பரப்பளவில் இந்த வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
இந்தியா மற்றும் உலகெங்கிலும் உள்ள துன்புறுத்தப்பட்ட மற்றும் ஆபத்தான சூழலில் இருந்து மீட்கப்பட்ட விலங்குகள் வசிப்பதற்கு அதிநவீன விசாலமான கூண்டுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
2100க்கும் மேற்பட்ட பணியாளர்களைக் கொண்ட இந்த மீட்பு மற்றும் மறுவாழ்வு மையம், சாலை விபத்துகள் அல்லது மனித-காட்டு மோதல்களில் காயம் அடைந்த சுமார் 200 சிறுத்தைகளை இந்தியா முழுவதிலும் இருந்து மீட்டுள்ளது. இது தமிழ்நாட்டில் பராமரிக்க முடியாமல்ல சிரமத்துக்கு ஆளான 1000 க்கும் மேற்பட்ட முதலைகளை மீட்டுள்ளது.
ஆப்பிரிக்காவில் உள்ள வேட்டையாடும் அச்சுறுத்தலுக்கு ஆளான விலங்குகள், ஸ்லோவாக்கியாவில் கருணைக்கொலை அச்சுறுத்தலுக்கு உள்ளான விலங்குகள், மெக்சிகோவில் உள்ள மருகக் காட்சி சாலைகளில் கடுமையாக பாதிக்கப்பட்ட விலங்குகளையும் மீட்டுள்ளது.
இந்த மையத்தில் 1 லட்சம் சதுர அடி மருத்துவமனை மற்றும் மருத்துவ ஆராய்ச்சி மையம் உள்ளது. மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் ICU, MRI, CT ஸ்கேன், எக்ஸ்ரே, அல்ட்ராசவுண்ட், எண்டோஸ்கோபி, பல் ஸ்கேலர், லித்தோட்ரிப்சி, டயாலிசிஸ், OR1 தொழில்நுட்பம் போன்ற மேம்பட்ட தொழில்நுட்பம் உள்ளது.
இன்று, வந்தாரா சுற்றுச்சூழல் அமைப்பு 200 யானைகளுக்கும், சிறுத்தை, புலி, சிங்கம், ஜாகுவார் போன்ற 300 க்கும் மேற்பட்ட விலங்குகளுக்கும், மான் போன்ற 300 க்கும் மேற்பட்ட சைவப் பிராணிகளுக்கும், முதலைகள், ஆமைகள், பாம்புகள் போன்ற 1200 க்கும் மேற்பட்ட ஊர்வனவற்றுக்கும் புதிய வாழ்வையும் நம்பிக்கையையும் அளித்துள்ளது.
வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம், 1972 மற்றும் மிருகக்காட்சிசாலை விதிகள் 2009 ஆகியவற்றின் படி, அந்தந்த மாநிலங்களின் தலைமை வனவிலங்கு காப்பாளர்கள் மற்றும் மத்திய உயிரியல் பூங்கா ஆணையத்தின் முன் அனுமதியைப் பெற்ற பிறகு, மீட்கப்பட்ட அனைத்து விலங்குகளும் வந்தாராவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
வெனிசுலா நேஷனல் ஃபவுண்டேஷன் ஆஃப் ஜூஸ் போன்ற சர்வதேச அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றுவதன் மூலமும், ஸ்மித்சோனியன் மற்றும் உலக உயிரியல் பூங்காக்கள், மீன்வளங்களின் சங்கம் போன்ற உலகெங்கிலும் உள்ள புகழ்பெற்ற நிறுவனங்களுடன் தொடர்புகொள்வதன் மூலமும் வந்தாரா திட்டம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது.
இந்தியாவில், இது தேசிய விலங்கியல் பூங்கா, அசாம் மாநில உயிரியல் பூங்கா, நாகாலாந்து விலங்கியல் பூங்கா, சர்தார் படேல் விலங்கியல் பூங்கா போன்றவற்றுடன் இணைந்து செயல்படுகிறது.
மக்கள் மத்தியில் குறிப்பாக இளைஞர்கள் மற்றும் குழந்தைகள் மத்தியில் விலங்குகள் பாதுகாப்பு பிரச்னைகள் பற்றிய விழிப்புணர்வை அதிகரிப்பதற்காக வந்தாரா பல கல்வி நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்துள்ளது.
ரிலையன்ஸ் அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் தலைவர் நிதா அம்பானி தலைமையில், கிராமப்புற மாற்றம், கல்வி, சுகாதாரம், வளர்ச்சிக்கான விளையாட்டு, பேரிடர் மேலாண்மை, பெண்கள் அதிகாரமளித்தல், நகர்ப்புற புதுப்பித்தல் ஆகியவற்றில் கவனம் செலுத்தி அனைவரின் ஒட்டுமொத்த நல்வாழ்வு மற்றும் மேம்பட்ட வாழ்க்கைத் தரத்துக்காக இடைவிடாமல் பணியாற்றி வருகிறது.
இந்தியா முழுவதும் 55,400 கிராமங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள 72 மில்லியனுக்கும் அதிகமான மக்களின் வாழ்க்கையை ரிலையன்ஸ் அறக்கட்டளை தொட்டுள்ளது. இதற்கெல்லாம் அனந்த் அம்பானிக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும்.