2024ஆம் ஆண்டில் சனியைப் பிடிக்கும் சுக்கிரன்.. தூள்கிளப்பப் போகும் ராசிகள்
வேத ஜோதிடத்தின்படி, பல கிரகங்களும் சீரான கால இடைவெளியில் தங்கள் ராசிகளை மாற்றிக்கொண்டு இருக்கின்றன. இதனால் ஒவ்வொரு ராசிகளுக்கும் சுப மற்றும் அசுப பலன்கள் உண்டாகின்றன.
அந்த வகையில் கும்பத்தில் சனி சஞ்சரித்துக் கொண்டிருக்கும் சூழலில் காலை 10.55 மணிக்கு சுக்கிரன் கும்பத்தில் சஞ்சரிக்கிறார். இதனால் சனியும் சுக்கிரனும் ஒரே ராசியில் இணைகின்றனர். இதனால் மூன்று ராசிகள் நற்பலன்களைப் பெறப்போகின்றனர்.
மிதுனம்: மிதுன ராசியின் ஒன்பதாம் வீட்டில் இந்த இணைவு நடப்பதால் மிதுனராசியினர் செல்வச் செழிப்பைப் பெறுவர். இதனால் திருமணத்தடை நீங்கும். சினிமாவுக்கு முயற்சிப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். கடவுள் மீதான நம்பிக்கை கூடும். கடல் கடந்து சென்று படிப்பீர்கள். உங்களின் தொழிலில் உச்சகட்ட லாபம் கிடைக்கும். பூர்வீக சொத்துகள் கைவந்துசேரும்.
துலாம்: இந்த ராசியில் ஐந்தாம் வீட்டில் இந்த இணைவு நடக்கிறது. உங்களின் அறிவுக்கூர்மை வலுப்படுத்தும் வாய்ப்பு கிடைக்கும். அதைப் பயன்படுத்தினீர்கள் என்றால் நல்லவொரு ஸ்தானத்தை அடைவீர்கள். அனைத்து துறையிலும் அனுகூலமான பலன்களே கிடைக்கும். பணியிடத்தில் பணி உயர்வு, தொழில் செய்தால் கணிசமான லாபம் கைவந்து சேரும். அயல்நாட்டுப் பணிக்கு முயற்சித்தால் வெற்றிபெறலாம். குடும்பத்தில் அன்பு பெருகும்.
மகரம்: இந்த ராசியில் இரண்டாம் வீட்டில் தான் இந்த இணைவு நடக்கிறது. இதனால் இந்த ராசியினருக்கு குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். முயன்றால் ஊதிய உயர்வுடன் கூடிய பணியிட மாற்றம் உருவாகும். கடின உழைப்புக்குப் பலன் கிட்டும். இந்த நல்ல சூழ்நிலையைப் பயன்படுத்தி வெளிநாடு செல்ல முயற்சித்தால் நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்கும். தொழில் பிக் அப் ஆகி கணிசமான லாபம் வரும். இக்காலகட்டத்தில் வங்கியில் உள்ள உங்கள் கணக்கில் பணம் அதிகரிக்கும்.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல்/பொருள்/கணக்கீட்டின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு எந்த விதமான உத்தரவாதமும் இல்லை. இதில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / சொற்பொழிவுகள் / நம்பிக்கைகள் / வேதங்களில் இருந்து சேகரித்து உங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மட்டுமே. இதிலிருந்து வெறும் தகவல்களை மட்டுமே பயனாளர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். மற்றபடி இதிலிருந்து பயன்படுத்திக்கொள்வது பயனாளரின் பொறுப்பாகும்.