ஹோம் லோனுக்கு மிக குறைந்த வட்டி: 25 வங்கிகளின் பட்டியல் இதோ!
சொந்த வீடு என்பது பெரும்பாலானோருக்கு கனவாகவே உள்ளது. பெரும் பணத்தை திரட்டி வீடு கட்ட திணறுகின்றனர்.
இதுபோன்ற காலகட்டத்தில் ஹோம்லோன்கள் உதவிகரமாக உள்ளன.
எனினும் இந்த ஹோம் லோன்களை பெற செயல்முறைகள் மிக கடினமாக உள்ளன. இதனால் பலரும் ஹோம்லோன் செயல்முறைகளை அணுக யோசிக்கின்றனர்.
ஆனால் உண்மையில் இந்த செயல்முறைகள் மிக எளிதானதாகும். மேலும், ஒருவர் வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் மற்றும் விதிமுறைகளைத் தீர்மானிப்பதில் சம்பந்தப்பட்ட நபரின் கிரெடிட் ஸ்கோர் முக்கிய பங்கு வகிக்கிறது.
ஆகவே, கடனுக்கு விண்ணப்பிக்கும் முன், கிரெடிட் ஸ்கோர் நகலைப் பெற்று, மதிப்பெண்ணைச் சரிபார்க்க வேண்டும். பொதுவாக, சிறந்த கடன் விருப்பங்களுக்கு 750 அல்லது அதற்கும் அதிகமான மதிப்பெண்களை இலக்காக உள்ளன.
மேலும், நிலுவையில் உள்ள கடன்களை செலுத்தி, சரியான நேரத்தில் பணம் செலுத்துவதன் மூலம் அதை மேம்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தற்போது, எஸ்பிஐ, ஹெச்டிஎஃப்சி வங்கி, ஐசிஐசிஐ வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி ஆக்ஸிஸ் வங்கி உள்பட 25 வங்கிகளின் வட்டி விகிதங்களை பார்க்கலாம்.