சேவல்களுக்கு கொடுக்கப்படும் ”வயாகரா”.. இப்படியுமா செய்வாங்க! அலறும் ஆந்திரா.. காரணம் இதுதான்
அமராவதி: பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில் ஆந்திராவில் சேவல்களுக்கு ‘வயாகரா’ கொடுக்கப்படுகிறது.
இந்த சேவல்களை சமைத்து சாப்பிட்டால் மனிதர்களுக்கு பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளது. இந்நிலையில் தான் ஆந்திராவில் சேவல்களுக்கு ‘வயாகரா’ கொடுக்கப்படுவது ஏன்? என்பது பற்றியும் அதன் பின்னணியில் உள்ள ஷாக் தகவலும் வெளியாகி உள்ளது.
வரும் 15ம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. அதேபோல் 16ம் தேதி மாட்டு பொங்கலும், 17 ம் தேதி காணும் பொங்கலும் கொண்டாடப்பட உள்ளது. தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட மக்கள் தயாராகி வருகின்றனர். இந்த 3 நாட்களும் ஜல்லிக்கட்டு உள்பட பல விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுவது வழக்கமான ஒன்றாக உள்ளது.
தமிழகத்தை போல் அண்டை மாநிலமான ஆந்திராவிலும் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அங்கு மகர சங்கராந்தி என்ற பெயரில் 3 நாட்கள் பொங்கல் கொண்டாடப்படுகிறது. இந்த சமயத்தில் ஆந்திராவில் சேவல் சண்டை, கிடா சண்டைகள் நடப்பது வழக்கம்.
இந்நிலையில் தான் தற்போது அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது ஆந்திராவில் சேவல் சண்டையில் ஈடுபடுத்தப்படும் சேவல்களுக்கு ‘வயாகரா’ வழங்கப்படுகிறது. சேவல்களுக்கு ‘வயாகரா’ அளிப்பதற்கு முக்கிய காரணம் அங்கு பரவும் ராணிகேத் நோயாகும். அதாவது சங்கராந்தி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் ஆந்திராவில் சேவல் சண்டைகள் மூலம் சிலர் லட்சக்கணக்கில் பணம் சம்பாதிப்பார்கள்.
தற்போது சேவல்களுக்கு ‘ராணிகேத்’ நோய் பரவுகிறது. இதனால் சேவல்கள் பாதிக்கப்பட்டு சோர்வாக காணப்படுகின்றன. இத்தகைய சூழலில் அந்த சேவல்களை வைத்து சண்டையிட்டு பணம் சம்பாதிக்க முடியாத நிலை உருவாகி உள்ளது. இதனை சரிசெய்யவும், சேவல் சண்டையில் வெற்றி பெற்று அதிக பணம் சம்பாதிக்கும் நோக்கத்திலும் தான் தற்போது சண்டை சேவல் வளர்ப்போர் சேவல்களுக்கு ‘வயாகரா 100, ஷிலாஜித் உள்பட பாலுணர்வை தூண்டும் மருந்துகளை கொடுக்கின்றனர்.