VidaaMuyarchi: ஆக்ஷன் கிங் அர்ஜுனை அசர வைத்த அஜித்… விடாமுயற்சியில் இப்படியொரு சம்பவமா..?
சென்னை: அஜித் தற்போது தனது 62வது படமான விடாமுயற்சியில் நடித்து வருகிறார். மகிழ் திருமேனி இயக்கும் இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. விடாமுயற்சியில் அஜித்துடன் ஆக்ஷன் கிங் அர்ஜுன் முக்கியமான கேரக்டரில் நடித்து வருகிறார். அவரை அசர வைக்கும் வகையில் அஜித் ஒரு சம்பவம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அர்ஜுனை அசர வைத்த அஜித் துணிவு படத்தைத் தொடர்ந்து அஜித் தற்போது விடாமுயற்சியில் நடித்து வருகிறார். அஜித்தின் 62வது படமாக உருவாகும் விடாமுயற்சியை மகிழ் திருமேனி இயக்கி வருகிறார். லைகா தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் இந்தப் படத்தின் ஷூட்டிங் அஜர்பைஜானில் நடைபெற்று வருகிறது. அஜித்துடன் த்ரிஷா, ஆக்ஷன் கிங் அர்ஜுன், ஆரவ், ரெஜினா, ப்ரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்து வருகின்றனர்.
ரோட் ஆக்ஷன் மூவியாக உருவாகும் விடாமுயற்சி படத்தில், அஜித் – ஆக்ஷன் கிங் அர்ஜுன் இருவருமே மிரட்டியுள்ளதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே மங்காத்தா படத்தில் மாஸ் காட்டிய இக்கூட்டணிக்கு, விடாமுயற்சி இன்னும் ஸ்பெஷலாக இருக்குமாம். அஜித்துக்கு இணையான ஒரு கேரக்டரில் அர்ஜுன் நடித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே அர்ஜுன், ஆரவ் ஆகியோருக்கு நைட் டின்னர் பார்ட்டி கொடுத்து அசத்தி இருந்தார் அஜித்.
அதேபோல், படப்பிடிப்பின் நடுவே அர்ஜுன், ஆரவ், ரெஜினா ஆகியோரை ஸ்டைலாக போட்டோ ஷூட் நடத்தியும் அஜித் சர்ப்ரைஸ் கொடுத்திருந்தார். இந்நிலையில் விடாமுயற்சி படத்தில் அஜித்தின் கேரக்டர் பெயர் குறித்து அப்டேட் கிடைத்துள்ளது. அதன்படி இந்தப் படத்தில் அஜித்தின் கேரக்டர் பெயர் ‘அர்ஜுன்’ எனத் தெரிய வந்துள்ளது. ரியல் ஆக்ஷன் கிங் அர்ஜுன் விடாமுயற்சியில் நடித்து வரும் போது, அவரது பெயர் கொண்ட கேரக்டரில் அஜித் நடித்து வருகிறார்.
இதனால் விடாமுயற்சி படத்தில் மேலும் சில சர்ப்ரைஸ் சம்பவங்கள் இருக்கும் என சொல்லப்படுகிறது. தற்போது வரை இரண்டு ஷெட்யூல்கள் முடிந்துவிட்ட நிலையில், விரைவில் அடுத்தக்கட்ட படப்பிடிப்பை தொடங்க விடாமுயற்சி படக்குழு ரெடியாகிவிட்டதாம். இன்னும் ஓரிரு மாதங்களில் விடாமுயற்சி படப்பிடிப்பு முடியும் என்றும், மே 1ம் தேதி அஜித் பிறந்தநாளில் படம் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. விடாமுயற்சியை தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார் அஜித். இது முழுக்க முழுக்க காமெடி ஜானரில் உருவாகவுள்ளதாக சொல்லப்படுகிறது. அதேபோல், அஜித்தின் ஏகே 64 படத்தை வெற்றிமாறன் இயக்கலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. விடாமுயற்சி ரிலீஸுக்குப் பின்னர் தான் இந்த அப்டேட்கள் அபிஸியலாக வெளியாகும் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.