Vidaamuyarchi – விடாமுயற்சி படத்துக்கு வந்திருக்கும் புதிய சிக்கல் இதுவா?.. அய்யோ இன்னும் என்ன நடக்கப்போகுதோ?
சென்னை: அஜித் நடிப்பில் கடைசியாக துணிவு திரைப்படம் வெளியானது. ஹெச். வினோத் இயக்கியிருந்த அந்தப் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது.
இதனையடுத்து மகிழ் திருமேனி இயக்கத்தில் அவர் இப்போது விடாமுயற்சி படத்தில் நடித்துவருகிறார். லைகா நிறுவனம் படத்தை தயாரிக்கிறது. கண்டிப்பாக இந்தப் படமும் துணிவு படமும் ஹிட்டடிக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்கள் ஏகே ரசிகர்கள்.
கோலிவுட்டின் டாப் நடிகர்களில் ஒருவரான அஜித் இதுவரை 61 படங்களில் நடித்திருக்கிறார். அவரது நடிப்பில் கடைசியாக வெளியான துணிவு திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. அந்தப் படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே தன்னுடைய 62ஆவது படத்தில் நடிக்க கமிட்டானார் அஜித். அதனை முதலில் விக்னேஷ் சிவன் இயக்குவதாக இருந்து பிறகு மகிழ் திருமேனி உள்ளே வந்தார்.
விடாமுயற்சி: அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு கடந்த மே மாதம் படத்தின் பெயர் விடாமுயற்சி என அறிவிக்கப்பட்டது. அதற்கு பிறகு எந்த அப்டேட்டும் படத்திலிருந்து வரவில்லை. இருந்தாலும் படத்தின் ஷூட்டிங் அஜர்பைஜானில் நடந்துவருகிறது. அஜித்தும் மும்முரமாக அதில் கலந்துகொண்டு நடித்துவிட்டு தற்போது குட்டி பிரேக் எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. மேலும் அந்த பிரேக்கில் அவர் தனது குடும்பத்தினருடன் முழுமையாக நேரத்தை செலவிட்டுவருகிறார். அதுதொடர்பான புகைப்படங்களும், வீடியோக்களும் வெளியாகி இணையத்தில் ட்ரெண்டாகின.
நட்சத்திர பட்டாளம்: இப்படத்தில் அஜித்துடன் அர்ஜுன், ஆரவ், திரிஷா, ரெஜினா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். மங்காத்தாவுக்கு பிறகு மீண்டும் அஜித்துடன் அர்ஜுன் இணைந்திருப்பதால் கண்டிப்பாக வேற லெவலில் இருக்கும் என ரசிகர்கள் உற்சாகமடைந்திருக்கின்றனர். சமீபத்தில்கூட ஷூட்டிங் ஸ்பாட்டில் வைத்து அஜித் எடுத்த புகைப்படங்கள் வெளியாகி ட்ரெண்டாகின.