வீடியோ: பழைய குளியலறைக்கு பின்னால் மனதை மயக்கும் உலகமா? பள்ளிக்கூடத்தில் காணப்பட்ட ரம்மியமான காட்சி!
இந்த உலகத்தின் ஒவ்வொரு அம்சத்தையும் முழுமையாகப் பார்த்து புரிந்துகொண்டால்தான் இந்த உலகம் எவ்வளவு தனித்தன்மை வாய்ந்தது என்பது உங்களுக்கு புரியும். பல நேரங்களில் இதுபோன்ற விஷயங்கள் எதிர்பாராத இடங்களில் காணப்படுகின்றன, இது உங்கள் பார்வையையே மாற்றும். சமீபத்தில் ஒரு பள்ளியின் குளியலறையின் பின்புறம் இதே போன்ற ஒன்று காணப்பட்டது. இந்தோனேசியாவில் அமைந்துள்ள இந்தப் பள்ளியின் பின்புறம் உள்ள காட்சியைப் பார்த்தால் நீங்கள் மெய்மறந்து போவீர்கள். ஏனெனில், இதுபோன்ற காட்சிகளுக்காக மக்கள் பிற நாடுகளுக்கு விலையுயர்ந்த பயணங்களை மேற்கொள்கின்றனர்.
World of Buzz வலைத்தளத்தின்படி, இந்தோனேசியாவின் கிழக்கு நுசா தெங்கராவில் அமைந்துள்ள ஒரு பள்ளியின் பின்புறத்தில் மற்றொரு உலகத்தைக் காணலாம். வேறொரு உலகம் ஏனென்றால் முன்னால் உடைந்த கட்டமைப்புகள் கொண்ட கழிவறைகள், ஆனால் பின்னால் உள்ள காட்சி மிகவும் அழகாக இருக்கிறது. மலைப்பாங்கான பகுதிகளில் கட்டப்பட்ட இடங்களானாலும் சரி, கடல் கரையில் கட்டப்பட்ட பகுதிகளாயினும் சரி, இந்த இடங்கள் அனைத்திலும் இயற்கை அழகுக்கு எல்லையே இருக்காது! இந்த காணொளியிலும் அதையே காணலாம்.
A view behind a school in Indonesia
pic.twitter.com/x3CgRvmPjX— Science girl (@gunsnrosesgirl3) January 21, 2024
பள்ளியின் பின்புறம் காணப்படும் அழகிய காட்சி:
வைரலான அந்த வீடியோவில் பள்ளி வளாகத்தில் இளைஞர் ஒருவர் இருப்பதை காணலாம். அவர் இரண்டு உடைந்த குளியலறைகளுக்கு இடையில் கடந்து, திரும்பிச் செல்லும்போது, அவர் ஒரு மலைப்பகுதியைப் பார்க்கிறார். அந்த மலைக்கு கீழே கடல் தெரியும். தண்ணீர் நீலமாக காட்சியளிக்கிறது, இது ஒரு சுற்றுலாத் தளமாக தெரிகிறது. அப்படிப்பட்ட இடத்தில் பள்ளிக்கூடம் இருந்தால் அந்த காட்சியைக் கண்டு ஆசிரியர்களோ மாணவர்களோ சலிப்படைய மாட்டார்கள். அந்த அளவிற்கு அழகான காட்சியாக உள்ளது.
@gunsnrosesgirl3 என்ற பெயருடைய கணக்கில் இருந்து X தளத்தில் இந்த வீடியோ பதிவிடப்பட்டுள்ளது. இந்த வீடியோ 1 கோடிக்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ள நிலையில், பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த காட்சி மிகவும் அழகாக உள்ளது, ஆனால் மிகவும் ஆபத்து நிறைந்தது கூட என்று ஒருவர் கருத்து தெரிவித்துள்ளர். மற்றொருவர், ஒவ்வொரு முறையும் மதிய உணவின் போது இந்த அழகிய காட்சியைப் பார்ப்பது மிகவும் தனித்துவமான அனுபவமாக இருக்கும் என்று கூறினார். காட்சி அழகாக இருக்கிறது, ஆனால் மாணவர்கள் நாள் முழுவதும் இதைப் பார்த்துக் கொண்டிருப்பதால் இது அவர்களின் கவனத்தை சிதறடிக்கும் என்று ஒருவர் கருத்து கூறினார். இந்த வீடியோ மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வைரலாகி வருகிறது.