வீடியோ- கார் கண்ணாடியை சுக்கு நூறாக உடைத்த ஆஸி. வீராங்கனை.. ஆர்சிபி அபார வெற்றி

மகளிர் பிரீமியர் லீக் தொடரில் உத்தரபிரதேச அணியை ஆர்சிபி 23 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மூன்றாவது வெற்றியை பதிவு செய்திருக்கிறது. பெங்களூருவில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற உத்தரபிரதேச அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதை அடுத்து களமிறங்கிய ஆர்சிபி வீராங்கனை மேக்னா மற்றும் கேப்டன் ஸ்மிருதி மந்தானா அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர். மேக்னா 28 ரன்களில் ஐந்து பௌண்டரிகள் விளாசி ஆட்டம் இழக்க ஸ்மிருதி மந்தானா 80 ரன்கள் விளாசினார்.
ஆஸ்திரேலிய வீராங்கனை எல்லிசி பெர்ரி 37 பந்துகளில் 58 ரன்கள் குவித்தார். இதில் நான்கு பவுண்டர்களும் நான்கு சிக்ஸர்களும் அடங்கும். இதேபோன்று ரிச்சா கோஸ் 10 பந்துகளில் 21 ரன்கள் சேர்க்க ஆர்சிபி அணி 20 ஓவர் முடிவில் மூன்று விக்கெட் இழப்பிற்கு 198 ரன்கள் எடுத்தது. ஆர்சிபி அணியின் எலிசா பெர்ரி பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது ஆட்டத்தின் 19 ஆவது ஓவரில் ஒரு சம்பவம் நடந்தது.
உத்திரபிரதேச வீராங்கனை தீப்தி சர்மா வீசிய பந்தை ஓங்கி எல்லிசி பெர்ரி அடித்தார். அந்த பந்து நேரடியாக சிக்சர் லைனை தாண்டி அங்கு பரிசுக்காக வைக்கப்பட்டிருந்த காரில் விழுந்தது. இதில் கார் கண்ணாடி சுக்கு நூறாக உடைந்தது. கார் கண்ணாடியை உடைத்து விட்டோமே என்று எல்லிசி பெர்ரி தன் தலையில் கையை வைத்து அதிருப்தியை வெளிப்படுத்தினார். இந்த காட்சி தற்போது சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது.
இதனை அடுத்து 199 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் உத்தர பிரதேச அணி விளையாடுவது. இதில் கேப்டன் அலிசா அபாரமாக விளையாடி 38 பந்துகளில் 55 ரன்கள் சேர்த்தார். மற்றொரு வீராங்கனை கிரன் 18 ரன்கள் சேர்க்க நடுவரிசை வீராங்கனைகள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்தனர்.
https://twitter.com/mufaddal_vohra/status/1764678021355893179
இறுதியில் தீப்தி சர்மா மற்றும் பூனம் ஆகியோர் ஜோடி சேர்ந்து உபி அணி ரசிகர்களுக்கு கொஞ்சம் நம்பிக்கை கொடுத்தனர். எனினும் தீப்தி சர்மா மற்றும் பூனம் ஆகியோர் முறையே 33 மற்றும் 31 ரன்களில் ஆட்டம் இழந்தனர். இதனால் உபி அணி 20 ஓவர் முடிவில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 175 ரன்கள் எடுத்து தோல்வியை தழுவியது. ஆட்ட நாயகி விருதை ஸ்மிருதி மந்தானா கைப்பற்றினார்.