வீடியோ.. “மேட்ச்ல இந்திய டீமை காப்பாற்றினது விராட் கோலிதான்” – சபா கரீம் பேச்சு
ஆனால் இந்திய பந்துவீச்சில் முக்கியமாக மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றி தந்த வாஷிங்டன் சுந்தர் குறித்து பெரிதான பேச்சுகள் ஏதும் இல்லை.
அதே சமயத்தில் நேற்று இந்திய அணி வெற்றி பெறுவதற்கு இன்னொரு காரணமாக விராட் கோலியின் பீல்டிங் இருந்தது. ஆட்டத்தின் முதல் பகுதியில் ஆரம்பித்து சூப்பர் ஓவர்கள் வரை அவருடைய சூப்பர் பீல்டிங் தொடர்ந்தது.
நேற்று இந்திய அணி பேட்டிங் செய்து இரண்டாவதாக பந்து வீசிய பொழுது 16.4 வாஷிங்டன் சுந்தர் ஓவரில் வீசப்பட்ட பந்தை ஆப்கானிஸ்தான் கரீம் ஜனத் நேராக தூக்கி அடித்தார்.
ஏறக்குறைய அந்த பந்து சிக்ஸருக்கு சென்று விட்டது. அப்படி எல்லோரும் நினைத்துக் கொண்டிருந்த பொழுது, பந்தை உன்னிப்பாக கவனித்து சரியான நேரத்தில் எம்பிய விராட் கோலி, பந்தை கேட்ச் பிடித்து ஆனால் அதைக் காக்க முடியாது என்று தெரிந்ததும் பவுண்டரி எல்லைக்கு வெளியில் வீசினார். இந்த அபார பீல்டிங் மூலம் ஐந்து ரன்கள் காட்டப்பட்டது. கடைசியில் ஆட்டம் டை ஆன பொழுது இது மிக முக்கியமான விஷயமாக அமைந்தது.
இதே நேரத்தில் அவர் மீண்டும் நஜிபுல்லா ஜட்ரன் வானத்தில் தூக்கி அடித்த பந்தை பல மீட்டர்கள் கவர் செய்து கேட்ச் எடுத்தார். அந்த நேரத்தில் அந்த கேட்ச் தவறவிடப்பட்டிருந்தால் குறைந்தது இரண்டு ரன்கள் எடுத்திருப்பார்கள். ஆட்டம் டை ஆவது கடினமாக இருக்கும்.
இதேபோல் முதல் சூப்பர் ஓவரில் முகேஷ் குமார் வீசிய முதல் பந்தை குல்பதின் நைப் நேராக அடிக்க, குர்பாஸ் அவரை 2 ரன்களுக்கு அழைக்க, நேராக பீல்டிங் நின்ற விராட் கோலி பந்தை துல்லியமாகவும் வேகமாகவும் சஞ்சு சாம்சன் கைகளுக்கு த்ரோ செய்தார். இதனால் குல்பதின் நைப் ரன் அவுட் ஆனார். இல்லையென்றால் முதல் சூப்பர் ஓவரில் ஏதாவது மாறி இருக்கும்.
நேற்று பேட்டிங்கில் முதல் பந்திலேயே ரன் எடுக்காமல் கோல்டன் டக் ஆகி வெளியேறிய விராட் கோலி, அதற்குப் பிறகு பீல்டிங்கில் களத்துக்குள் வந்து அற்புதமான தாக்கத்தை உருவாக்கினார். நல்ல பேட்ஸ்மேன்கள் ஆட்டம் இழக்கலாம், ஆனால் நல்ல பீல்டர்கள் எப்பொழுதும் தாக்கத்தை உண்டாக்குவார்கள் என்கின்ற தோனியின் கருத்தை விராட் கோலி நேற்று உண்மையாக்கி காட்டினார்.