வீடியோ: நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இவ்ளோ சூப்பரான பாடகரா? அவரது குரலில் விஜயகாந்தின் மாஸ் ஹிட் பாடல்
சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த வெங்கடேசன், விஜயகாந்தின் மாஸ் ஹிட் பாடல் ஒன்றை தனது குரலில் அழகாக பாடியுள்ளார். இது தற்போது வைரல் ஆகி வருகிறது.
தமிழ் சினிமாவில் தனது தனித்துவமான நடிப்பால் அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்த நடிகர் விஜயகாந்த். புரட்சியாளனாக, காமெடியனாக, கேமியோ கதாபாத்திரமாக, காதல் தோல்வியுற்ற இளைஞனாக, போலீஸ்காரனாக பல மாறுபட்ட கதாபாத்திரங்களிலும் தனது தனித்துவமான நடிப்பால் முத்திரை பதித்துள்ளார்.
நானே ராஜா நானே மந்திரி, கேப்டன் பிரபாகரன், சத்ரியன், வைதேகி காத்திருந்தாள், அம்மன் கோயில் கிழக்காலே உள்ளிட்ட படங்கள் சிறியதொரு சாட்சியாகும்.
இந்த நிலையில் நீதிபதி ஆனந்த வெங்கடேசன் விஜயகாந்தின் மாஸ் ஹிட் பாடல் ஒன்றை பாடியுள்ளார்.
இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நீதிபதி ஆனந்த வெங்கடேசன் பாடியுள்ளது, அம்மன் கோயில் கிழக்காலே படத்தில் வரும் காதல் பாடல் ஆகும். அந்த காலத்தில் இந்த பாடல் பட்டித்தொட்டி எங்கும் ஹிட் அடித்த ஒரு சில பாடல்களில் ஒன்றாகும். இன்று வரை இந்த பாடல் ஒரு எவர்கிரீன் சாங்காக ரசிகர்கள் மத்தியில் திகழ்கிறது.
கேப்டன் விஜயகாந்த் உடல்நல குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 71. உடல் நலக்குறைவு காரணமாக சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த விஜயகாந்த், கொரோனா பெருந் தொற்று மற்றும் நுரையீரல் பிரச்சனை காரணமாக நேற்று காலமானார்.