வீடியோ வெளியிட்ட விஜயலட்சுமி : சீமான் மாமா..நான் ஒன்னும் உங்க கள்ளக்காதலி இல்ல..!
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தன்னை திருமணம் செய்துகொள்வதாக கூறி ஏமாற்றி விட்டதாக நடிகை விஜயலட்சுமி கடந்த சில ஆண்டுகளாக குற்றம்சாட்டி வருகிறார். இதுதொடர்பாக சென்னையில் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார். கடந்த சில மாதங்களுக்கும் முன்பு மீண்டும் சீமான் குறித்து சென்னை காவல் ஆணையர் அலுவகம் மற்றும் வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
ஆனால் சில நாட்களிலேயே அந்த புகாரை திரும்ப பெற்ற விஜயலட்சுமி, பெங்களூருவுக்கே திரும்ப சென்றார். இருப்பினும் பெங்களூருவில் இருந்தப்படியே அடிக்கடி வீடியோ வெளியிட்டு வருகிறார் விஜயலட்சுமி. அதில் தான் தற்கொலை செய்து கொள்ளப்போவதாகவும், தன்னுடைய வாழ்க்கையை சீரழித்த சீமானை சும்மா விடப்போவதில்லை என்றும் தெரிவித்து வருகிறார்.
இந்நிலையில், தற்போது மீண்டும் ஒரு காணொளி வெளியிட்டுள்ளார். அதில், “சீமான் மாமா..நான் ஒன்னும் உங்க கள்ளக்காதலி இல்லை, உங்கள பிரிஞ்சி என்னால் வாழ முடியவில்லை. எவ்ளோ சண்டை போட்டாலும் நீங்கதான் என் கணவர், என்னைய ஏத்துக்கோங்க” என பேசியிருக்கிறார்.