சிம் கார்டு, இன்டர்நெட் இல்லாமலே வீடியோ ஸ்ட்ரீமிங் செய்யலாம்! மத்திய அரசின் புதிய ஐடியா!

மொபைல் பயனர்கள் விரைவில் சிம் கார்டு அல்லது இணைய இணைப்பு இல்லாமலேயே வீடியோக்களை ஸ்ட்ரீம் செய்ய முடியும், அதற்கான டைரக்ட் டூ மொபைல் (Direct-2-Mobile) ஒளிபரப்பு தொழில்நுட்பத்தை மத்திய அரசு சோதனை செய்துவருகிறது.

இதுபற்றிக் கூறியுள்ள தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறையின் செயலாளர் அபூர்வ சந்திரா கூறுகையில், “19 நகரங்களில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட டைரக்ட்-டு-மொபைல் (D2M) தொழில்நுட்பத்தின் சோதனைகள் விரைவில் நடைபெறும். என்று குறிப்பிட்டுள்ளார்.

ஒளிபரப்பு உச்சி மாநாட்டில் உரையாற்றிய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறையின் செயலர் அபூர்வ சந்திரா, இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட டைரக்ட்-டு-மொபைல் (D2M) தொழில்நுட்பத்தின் சோதனைகள் விரைவில் 19 நகரங்களில் நடத்தப்படும் என்றும், இதற்கு 470-582 மெகா ஹெர்ட்ஸ் அலைக்கற்றையை ஒதுக்குவதற்கான வலுவான வசதிகளை உருவாக்குவதாகவும் கூறினார்.

25-30 சதவீத வீடியோ ஸ்ட்ரீமிங் டிராஃபிக்கை D2M சேவைக்கு மாற்றுவதன் மூலம் 5G நெட்வொர்க்குகளின் டிராபிஃக் நிலை மேம்படும் என்றும் இது நாட்டின் டிஜிட்டல் வளர்ச்சியை துரிதப்படுத்தும் என்றும் கூறினார்.

கடந்த ஆண்டு, பெங்களூரு, கர்தவ்யா பாத் மற்றும் நொய்டாவில் D2M தொழில்நுட்பத்தை சோதிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன என்றும் குறிப்பிட்டார்.

D2M தொழில்நுட்பம் நாடு முழுவதும் உள்ள 8-9 கோடி டி.வி. இல்லாத வீடுகளை இந்த சேவை சென்றடையும் என்றும் அபூர்வ சந்திரா நம்பிக்கை தெரிவித்துள்ளார். நாட்டில் உள்ள 28 கோடி குடும்பங்களில், 19 கோடி குடும்பங்களில் மட்டுமே தொலைக்காட்சிப் பெட்டிகள் உள்ளன என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *