வயசாக வயசாக.. நயன்தாராவை பற்றி விக்னேஷ் சிவன் போட்ட அப்படி ஒரு பதிவு
நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் விவாகரத்து செய்யப்போகிறார்கள் என ஒரு வாரத்திற்கு முன்பு செய்தி பரவ தொடங்கியது ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இருப்பினும் வழக்கம் போல அவர்கள் ஜோடியாக புகைப்படம் வெளியிட்டு அந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தனர். தற்போது விக்னேஷ் சிவன் மற்றும் மகன்கள் உடன் நயன்தாரா வெளிநாட்டுக்கு ட்ரிப் கிளம்பி இருக்கிறார். விமானத்தில் இருந்து நயன் வெளியிட்ட ஸ்டில் வைரல் ஆகி இருந்தது.
வயசாக வயசாக..
இந்நிலையில் மகளிர் தின வாழ்த்து சொல்ல நயன்தாராவின் சில போட்டோக்களை வெளியிட்டு இருக்கும் விக்னேஷ் சிவன் “வயசாக வயசாக மெருகேறிக்கொண்டே இருக்கும் ரெண்டே விஷயம். Happy Women’s Day @nayanthara” என கூறி இருக்கிறார்.