ராமாயணம் படத்தில் விஜய்சேதுபதி நடிக்கிறாரா?.. நைசாக ஒதுங்கிய கேஜிஎஃப் ஹீரோ.. அப்படின்னா அந்த ரோலா?
சென்னை: பிரபாஸ் நடிப்பில் கடந்த ஆண்டு ஆதிபுருஷ் திரைப்படம் ராமாயண கதையை அடிப்படையாக கொண்டு உருவானது.
இந்நிலையில், இன்னொரு ராமாயணம் படத்திற்கும் சீக்கிரமே பூஜை போட்டு ஆரம்பித்து விடுவார்கள் என்றே தெரிகிறது. அமீர்கானை வைத்து தங்கல் படத்தை எடுத்த பிரபல பாலிவுட் இயக்குநர் நிதேஷ் திவாரி இயக்கத்தில் இந்தியில் பிரம்மாண்டமாக ராமாயணம் திரைப்படம் உருவாக போகிறது.
ஓம் ராவத் இயக்கத்தில் பிரபாஸ், க்ரித்தி சனோன், சைஃப் அலிகான் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான ஆதிபுருஷ் திரைப்படம் பெரிதளவில் ஓடாத நிலையில், மீண்டும் ஒரு ராமாயண படத்தை பாலிவுட்டில் இயக்க உள்ளனர். சமீபத்தில், அயோத்தியில் ராமர் கோயில் திறக்கப்பட்ட நிலையில், ராமர், ஹனுமான் படங்களுக்கு அதிகளவில் டிமாண்ட் ஏற்பட்டுள்ளது.
ஹனுமான் வசூல்: வால்மீகி எழுதிய ராமாயணத்தில் ராமருக்கு பக்க துணையாக இருந்தது அனுமான் தான். சமீபத்தில் தெலுங்கில் வெளியான ஹனுமான் திரைப்படம் மகேஷ் பாபுவின் குண்டூர் காரம் திரைப்படத்தையே வீழ்த்தி விட்டது. வெறும் 20 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட ஹனுமான் படத்தில் தேஜா சஜ்ஜா, அம்ரிதா அய்யர், வரலட்சுமி சரத்குமார், வினய் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். டோலிவுட்டை தாண்டி பாலிவுட் பெல்ட்டில் அந்த படம் பாக்ஸ் ஆபிஸில் வசூல் சாதனை படைக்க 250 கோடி வசூலை கடந்து 300 கோடியை நெருங்கி வருகிறது என்கின்றனர்.