Vijay – வெங்கட் பிரபுவால் விஜய்க்கு வந்த ஆபத்து?.. GOAT படத்தால் என்னனமோ கிளம்புதே.. பரபரப்பு தகவல்

சென்னை: விஜய் நடிப்பில் கடைசியாக வெளியான லியோ திரைப்படம் விமர்சன ரீதியாக அடி வாங்கினாலும் வடூல் நீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.
அந்தப் படத்தில் நடித்துக்கொண்டிருந்தபோதே விஜய் தனது 68ஆவது படத்தில் கமிட்டானார். அதனை வெங்கட் பிரபு இயக்க ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. படத்துக்கு GOAT என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் அந்தப் படம் குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.
தமிழ் சினிமாவில் அதிக வியாபாரம் நடக்கும் ஹீரோக்களில் இப்போதைக்கு டாப்பில் இருப்பவர் விஜய். அவர் நடிப்பில் கடைசியாக வெளியான லியோ, வாரிசு, பீஸ்ட் ஆகிய மூன்று படங்களுமே விமர்சன ரீதியாக அடி வாங்கினாலும் வசூல் ரீதியாக நல்ல ரெஸ்பான்ஸை பெற்றிருப்பதாக கூறப்படுகிறது. இந்த சூழலில் அவர் வெங்கட் பிரபு இயக்கத்தில் GOAT படத்தில் நடித்துவருகிறார். ஏஜிஎஸ் நிறுவனம் தனது 25ஆவது படமாக இதனை தயாரிக்கிறது. யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.
GOAT ஸ்குவாட்: இப்படத்தில் விஜய்யுடன் பிரசாந்த், பிரபுதேவா, மைக் மோகன், ஜெயராம், வைபவ், பிரேம்ஜி அமரன், அஜ்மல், சினேகா, லைலா, மீனாட்சி சௌதரி என பெரும் நட்சத்திர பட்டாளமே நடித்துவருகிறார். பல வருடங்கள் கழித்து டாப் ஸ்டார் பிரசாந்த் தமிழில் GOATபடத்தின் மூலம் ரீ எண்ட்ரி கொடுக்கிறார். அதேபோல் மைக் மோகன் வில்லனாக நடிக்கிறார் என்றும் கூறப்படுகிறது. இதனால் படத்தின் மீது உச்சக்கட்ட எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.
போஸ்டர்கள்: படத்திலிருந்து இதுவரை மூன்று போஸ்டர்கள் வெளியாகியிருக்கின்றன. புத்தாண்டையொட்டி இரண்டு போஸ்டர்களும், பொங்கல் பண்டிகையை ஒட்டி ஒரு போஸ்டரும் வெளியாகின. பொங்கலுக்கு வெளியான போஸ்டரில் விஜய், பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல் ஆகியோ கமாண்டோ உடையில் கையில் மெஷின் கன்னுடன் சிரித்துக்கொண்டிருக்கும்படி இருந்தார்கள். அது பெரும் வரவேற்பை பெற்றது.
ஷூட்டிங்: படத்தின் ஷூட்டிங் சென்னையில் தொடங்கியது.