“அப்போ அப்படி சொன்னாரே” கொடுத்த வாக்கை காப்பாற்றாத விஜய்.. கலைஞர் 100 விழாவிற்கு வராததால் சர்ச்சை.!!
தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக இருப்பவர் தளபதி விஜய் .இவருடைய நடிப்பில் தற்போது கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது.
வெங்கட் பிரபு இயக்கத்தில் முதல் முறையாக இவர் நடித்து வருகிறார். இந்த நிலையில் நேற்று முன்தினம் கலைஞர் 100 நிகழ்ச்சி மிகவும் பிரமாண்டமாக சென்னையில் நடைபெற்றது. இது திரையுலகினார் பலரும் வருகை தந்திருந்தார்கள். ஆனால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அஜித் மற்றும் விஜய் இருவரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை.
கடந்த 2010 இல் பாசத்தலைவனுக்கு பாராட்டு விழா என்று கலைஞருக்கு மரியாதை செலுத்தும் வகையில் இந்த நிகழ்ச்சியானது நடைபெற்றது, அப்போது பேசிய விஜய், கலைஞருக்கு ஒரு சிலை வைக்க வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன். அவருடைய நூறு வயதில் இதே போல் ஒரு நிகழ்ச்சி நடத்த வேண்டும். அந்த நிகழ்ச்சியில் நான் அவருடன் இணைந்து அந்த சிலையை ரசிக்க வேண்டும் என்று கூறினார். ஆனால் நேற்று நடைபெற்ற கலைஞர் 100 விழாவில் விஜய் கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.